சிறுமிகளுடன் ‘ஜாலி’... ஆண்டுதோறும் ‘செக்ஸ் சுற்றுலா’ செல்லும் 80,000 இத்தாலியர்கள்
ரோம்: உலக அளவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே சின்னஞ்சிறு குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கேள்விப்படுவது அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி வருகிறது. இது காமக் கொடூரர்களின் அசுர முகத்தை உலகிற்கு காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு ‘செக்ஸ் சுற்றுலா' செல்வதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று ஆய்வில் வெளியாகியுள்ளது.
சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் வன் கொடுமைகள்....
உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சிறுமிகள் கடத்தல்...
மேலும், உலகளாவிய அளவில் கடத்தப்படும் சிறுமிகள், பெரும்பாலும் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதையும் இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.

செக்ஸ் சுற்றுலா....
இத்தாலி, சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாம்.

80,000 இத்தாலியர்கள்....
அந்த வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கிளை அமைப்புகள்....
'எக்பட் இட்டாலியா' தொண்டு நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications