பாகிஸ்தானில் ‘சூரசம்ஹாரம்’ ஓயவில்லை... ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி தாஜ் முகமது சுட்டுக் கொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதி தாஜ் முகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற பல்வேறு இயக்கங்களின் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட சில பயங்கரவாதிகள் விவரம்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஷாகித் லத்தீப். 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படை வீரர்கள் 7 பேரின் உயிரைப் பறித்த பதான்கோட் தாக்குதலின் மூளையாக இருந்தவர் லத்தீப். பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தாஸ்கா நகரில் உள்ள மசூதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரியாஸ் அகமது: அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது, லஷ்கர்-இ-தொய்பா . 2023 -ம் ஆண்டு ஜனவரியில் நடந்த தாங்ரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவர். ஜனவரி 1- தேதி காஷ்மீர் ரஜோரியில் உள்ள தாங்ரி கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட்டில் உள்ள அல்-குதுஸ் மசூதிக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார் ரியாஸ் அகமது.
பஷீர் அகமது பீர்: பஷீர் அகமது பீர், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி. 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சையத் காலித் ராசா: பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-பத்ர்ஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி சையத் காலித் ராசா, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கராச்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிஸ்திரி ஜாகூர் இப்ராஹிம் : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 ஐ கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்திரி ஜாகூர் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி, ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்ட ஐசி 814 விமானத்தைக் கடத்திய ஐந்து பேரில் மிஸ்திரி ஜஹூர் இப்ராகிமும் ஒருவர்.
பரம்ஜித் சிங் பஞ்வார்: காலிஸ்தான் கமாண்டோ படையின் (கேசிஎஃப்) தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வார் இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் லாகூரில் இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரஹீம் உல் தாரிக் : தீபாவளி நாளில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் வலதுகரமான மவுலானா ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான பொதுக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் ரஹீம் உல் தாரிக் கொல்லப்பட்டார்.
ஷாகித் அலியாஸ் : 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித், பதன்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஷாகீத் லத்தீப், ரியாஸ் அகமது என கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாஜ் முகமது: இந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பது தாஜ் முகமது என்ற ஜெய்ஷே முகமது இயக்க பயங்கரவாதி. இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தளபதி அப்துல் ரவூப் அஸ்காரின் உறவினர்தான் இந்த தாஜ் முகமது. பாகிஸ்தானின் பாரா நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் தாஜ் முகமது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications