ஜப்பானின் புகுஷிமா அருகே 7.3 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகளில் மின்சார தடை இதனால் ஏற்பட்டுள்ளது. 2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலநடுக்கம்
இது வடக்கு ஜப்பான் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. இப்போது 11 வருடங்கள் கழித்து மீண்டும் மார்ச் மாதத்தில் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி
ஜப்பானில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புகுஷிமாவில் சுனாமி அலைகள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது .. இதன் காரணமாக 40.5 மீட்டர் உயரம் வரை அங்கு அலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வடக்கு Honshu பகுதிதான் இந்த சுனாமி காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். தற்போது இதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அங்கு சுனாமி காரணமாக ஏற்பட்ட அலை அணு உலை ரியாக்டர் 1-4 வரை சென்றது. இதனால் அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதம் அடைந்து செயல் இழந்தது. இதன் காரணமாக அணு உலை கூலண்ட் வேலை செய்யாமல் போய், அது அணு கசிவு ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த அணு உலை மீது அப்போது 14 மீட்டர் உயர சுனாமி அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அணு உலை
இதனால் அங்கு மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டது. அதோடு மூன்று ஹைட்ரஜன் வெடிப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20 கிமீ சுற்றுவட்டாரத்தில் இருந்த 154,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பல லட்சம் லிட்டர் அணு ஆயுத கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசிபிக் கடலில் கலந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் ஏற்பட்ட 2011 சுனாமி காரணமாக 19,747 பேர் பலி, 6,242 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை கசிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,202 பேர் இங்கு பலியானது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications