For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் நோன்புக் கஞ்சியுடன் தொடர் இஃப்தார் நிகழ்ச்சிகள்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நோன்பாளிகளுக்காக நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) கடந்த வருடம் (2013) புனித ரமலான் மாதம் முழுவதும் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆப் பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தியது அனைவரும் அறிந்த செய்தி.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 200 நபர்கள் முதல் விடுமுறை நாட்களில் உள் பள்ளிவாசல் நிரம்ப அதிகபட்சம் 600 நபர்கள் வரை கலந்து கொண்டனர். குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட சிறப்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 700 பேர் கலந்து கொண்டனர்.

தினந்தோறும் நோன்பு திறப்பதற்கு பேரீத்தம் பழம், தண்ணீர், மோர், குளிர் பானம், நோன்புக் கஞ்சி, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை, தர்பூசணி போன்ற பல்வேறு பழ வகைகள், வடை, சமோசா மற்றும் பஜ்ஜி ஆகியவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு உணவும் வழங்கப்பட்டது.

குவைத் அரசாங்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் பெண்களுக்கும் நோன்பு திறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து நாட்களிலும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். குவைத் வெளிநாட்டு அமைப்புகள் வரலாற்றில் இது ஓர் மைல்கல் என்றால் அது மிகையல்ல. கே-டிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் குவைத் வாழ் தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தினந்தோறும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக சிந்தைக்கினிய சிற்றுரைகள், உள்ளங்களை நிம்மதியாக்கும் இறை நினைவு (திக்ர்) மஜ்லிஸ், அதைத் தொடர்ந்து சிறப்பான துஆவுடன் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இவ்வருடத்தின் முதல் நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் 20 பெண்கள் உட்பட 450க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

நோன்பு திறப்பதற்கு தமிழக ருசியுடன் கூடிய சுவையான நோன்புக் கஞ்சி, பேரீத்தம் பழம், தண்ணீர், மோர், குளிர்பானம் மற்றும் பழ வகைகளும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்படும். இஷா மற்றும் தராவீஹ் (ரமழான் சிறப்புத் தொழுகை 20 ரக்அத்துகள்) தொழுகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

K-Tic arranges for Iftar programme in Kuwait

குவைத்தில் வசிக்கும் நபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் நபர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை தெரிவிக்குமாறு சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோன்பு திறக்க வருகை தரும் நோன்பாளிகளை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக அமர வைத்து, சிறப்பான முறையில் உபசாரம் செய்து, தாயகத்தில் இருப்பதை போன்ற சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைப்பதற்குண்டான சிறப்பான பணிகளை செய்வதற்கு சங்கத்தின் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாக சங்கத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

English summary
K-Tic has arranged for Iftar programme in the holy month of Ramadan in Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X