Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசின் ஒற்றை அறிவிப்பால் பெரும் கலவரம்.. 164 பேர் பலி, பலர் படுகாயம்.. கஜகஸ்தானில் என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

நூர்-சுல்தான்: மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பல திடுக் தகவல்களும் வெளியாகியுள்ளது.

சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் உருவான நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் அதிக எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாகும்.

புத்தாண்டு சமயத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் விலையை அந்நாட்டு அரசு இரண்டு மடங்கு உயர்த்தியது. இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

கஜகஸ்தான் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராகப் பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இருப்பினும், இந்த போராட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. அரசு அலுவலகங்கள், அரசுக்குச் சொந்தமான வாகனங்களைப் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர், குறிப்பாக அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் 1.88 கோடி மக்கள்தொகையைக் கொண்ட கஜகஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

 கலவரத்தால் பதற்றம்

கலவரத்தால் பதற்றம்

இந்த போராட்டங்களால் 199 மில்லியன் டாலர் மதிப்பிலான அரசு சொத்துகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட வாகனங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மேலும், இந்த கலவரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிகளவிலான உணவுப் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால், உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,

 பல்வேறு நடவடிக்கை

பல்வேறு நடவடிக்கை

கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போனது. இதனால் ஒரு கட்டத்தில் கஜகஸ்தான் அரசு பதவி விலகியது. இதையடுத்து அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் கலவரத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களைக் கண்டதும் சூடவும் போலீசாருக்கு அதிபர் காசிம் ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் கூட கலவரம் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை.

 164 பேர் பலி

164 பேர் பலி

இந்த கலவரத்தால் கஜகஸ்தான் நாட்டில் 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குற்றவாளிகள் 26 பேரும் போலீசார் 16 பேரும் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இப்போது வெளியாகியுள்ள தகவல்களில் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், கலவரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆட்சியைக் கவிழ்க்கச் சதி

ஆட்சியைக் கவிழ்க்கச் சதி

அதேநேரம் இது தானாக எழுந்த மக்கள் போராட்டம் இல்லை என்றும் கஜகஸ்தான் அரசைக் கவிழ்க்க சில வெளிநாட்டுச் சக்திகள் செய்யும் முயற்சி என்றும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போராட்டக்காரர்கள் போர்வையில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகளே கலவரத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்துவதாக இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையே ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்த குற்றச்சாட்டில் கஜகஸ்தான் முன்னாள் பிரதமர் கரீம் மாசிமோவ் தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+