For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க காங்கிரஸில் ஏன் யாருமே மோடியுடன் செல்ஃபி எடுக்கவில்லை தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடியுடன் அந்நாட்டு எம்.பி.க்கள் யாகும் செல்ஃபி எடுக்காததன் காரணம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் அந்நாட்டு எம்.பி.க்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

Know why no one took selfies with Modi at the US Capitol

மோடி சும்மாவே செல்ஃபி மேல் செல்ஃபி எடுப்பார். அப்படி இருக்கையில் காங்கிரஸில் அவர் ஒரு செல்ஃபி கூட எடுக்கவில்லை. மேலும் அமெரிக்க எம்.பி.கள், அவர்களின் உதவியாளர்கள் என யாரும் மோடியுடன் செல்ஃபி எடுக்கவில்லை.

காரணம் மோடி காங்கிரஸுக்கு வரும் முன்பு எம்.பி.களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருந்ததாவது,

முதல் விஷயமாக யாரும் செல்ஃபி எடுக்கக் கூடாது. நம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு நாட்டின் தலைவருடன் செல்ஃபி எடுப்பது முறை அல்ல என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காரணத்தால் தான் எம்.பி.க்கள் யாரும் மோடியுடன் செல்ஃபி எடுக்கவில்லையாம்.

English summary
US lawmakers have been strictly instructed not to take selfies with PM Narendra Modi as it won't be appropriate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X