For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மியூசியத்திற்குப் போன லேடி காகாவின் "நான் வெஜ்" டிரஸ்

Google Oneindia Tamil News

நியூயார்க்: பெரும் சர்ச்சையைக் கிளப்பிய லேடி காகாவின் மாட்டு இறைச்சியால் நெய்யப்பட்ட ஆடை அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு எம்டிவி வீடியோ இசை விருது விழாவின்போது அவர் அணிந்து வந்த ஆடை இது. அப்போது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் இது கிளப்பியது.

இந்த நிலையில் இந்த ஆடையை தற்போது மியூசியத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிளீவ்லாந்து மியூசியத்தில்

கிளீவ்லாந்து மியூசியத்தில்

கிளீவ்லாந்தில் உள்ள ராக் அன்ட் ரோல் மியூசியத்தில் இந்த உடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இங்கு இதை வைக்கவுள்ளனர்.

மாட்டு இறைச்சியால் ஆன உடை

மாட்டு இறைச்சியால் ஆன உடை

இந்த உடையானது, அர்ஜென்டினா நாட்டு மாடுகளின் இறைச்சியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். பிரான்க் பெர்னாண்டஸ் என்பவர் இதை வடிவமைத்திருந்தார். இந்த உடையை இதுவரை ஒரு இறைச்சி லாக்கரில் பத்திரப்படுத்தி, பதப்படுத்தி வைத்திருந்தனர்.

பதப்படுத்தி காட்சிக்கு

பதப்படுத்தி காட்சிக்கு

ரசாயனம் மூலம் இதுவரை இந்த உடை பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இதை வெளியில் எடுத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வந்து பத்திரமாக காட்சிக்கு வைத்துள்ளனர்.

பெயின்ட் பூசி

பெயின்ட் பூசி

இந்த உடை புத்தம் புதிதாக காட்சி அளிக்கும் வகையில் புதிய பெயிண்ட்டையும் அதன் மேல் பூசி புதுப்பித்து பொலிவாக்கியுள்ளனராம். எனவே பார்ப்பதற்கு புத்தாடை போலவே அது காட்சி தருகிறது.

பேட் ரொமான்ஸ்

பேட் ரொமான்ஸ்

பேட் ரொமான்ஸ் என்ற மியூசிக் ஆல்பத்திற்காக விருது பெற்றபோது இந்த உடையில்தான் வந்திருந்தார் லேடி காகா. இதற்கு பேட்டா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சரச்சை

சரச்சை

விதம் விதமான, வித்தியாசமான, வில்லங்கமான உடை அணிவதற்குப் பெயர் போனவர் லேடி காகா ஆவார் என்பதால் இந்த உடையும் அவரால் சர்ச்சைக்குள்ளானது.

English summary
Lady Gaga's meat dress, which sparked intense controversy when she wore it to the 2010 MTV Video Music Awards, went back on view today at a museum exhibition. The Rock and Roll Hall of Fame in Cleveland said that the dress would be on display until the end of the year to mark the fifth anniversary of one of fashion's most-discussed recent incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X