Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு வேலைக்காரரை திருமணம் செய்த பணக்கார பெண்.. காரணம் தெரியுமா.. ஊரெல்லாம் இதான் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காதல் வயது, ஜாதி, மதம், இனம், மொழி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமே தெரியாது என்பார்கள்.

காக்கை குருவி முதல் விலங்குகள் வரை காதல் என்ற ஒற்றைச் சொல் இல்லாமல் இருக்காது. பண்டைய காலத்தில் ராஜாக்கள், இளவரசிகள், ராணிகள் உள்ளிட்டோருக்கு இடையே காதல் ஏற்பட்டது.

இதற்கு நல்லதொரு உதாரணம் மும்தாஜ்- ஷாஜகான், ரோமியோ ஜூலியட், ஆதாம் ஏவால் ஆகும். மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மகாலை கட்டியுள்ளார். இந்த காதல் சின்னம் இன்று வரை அந்த கட்டடக்கலை வெளிநாட்டினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 காதல்

காதல்

அந்த அளவுக்கு காதல் என்பது மன உணர்வு சம்பந்தப்பட்டது. ஜாதி, மதம், ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் மூலம் ஆணவக் கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில் கோடீஸ்வர பெண்ணுக்கும் அவரது வீட்டில் பணியாற்றும் இளைஞருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இஸ்லாமாபாத்

இஸ்லாமாபாத்

இந்த சம்பவம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. நசியா எனும் வசதி படைத்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டு வேலைகளுக்காக தோழிகளிடம் பணியாளர் வேண்டும் என கேட்டு யாராவது தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ள சொல்லுமாறு கூறியிருந்தார்.

நசியாவுக்கு பணியாளர்

நசியாவுக்கு பணியாளர்

இதையடுத்து நசியாவுக்கு பணியாளர் பணிக்காக சுஃபியன் என்ற இளைஞரை தோழிகள் பரிந்துரை செய்தனர். அவருக்கு மாத ஊதியமாக ரூ 18 ஆயிரம் வழங்குவதாக பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சுஃபியானின் குணத்தால் நசியா ஈர்க்கப்பட்டார். உடனே நசியா சுஃபியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என கேட்டுள்ளார்.

மயங்கிய சுஃபியான்

மயங்கிய சுஃபியான்

இந்த வார்த்தையை கேட்டவுடன் சுஃபியான்,மயங்கியே விழுந்துவிட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட அவர் உடனே ஐ லவ் யூ என சொல்லியுள்ளார். நசியாவுக்கு உடல் நிலை சரியில்லாவிட்டால் சுஃபியன் உடனிருந்து கவனித்து கொள்வார். மருந்து மாத்திரைகளை கொடுப்பது,உணவு சமைத்து கொடுப்பது உள்ளிட்ட அதிக பராமரிப்பு குணம் கொண்டதால் நசியாவுக்கு அவர் மீது காதல் ஏற்பட காரணம் என சொல்லப்பட்டது.

 நசியா சுஃபியா காதல் கதை

நசியா சுஃபியா காதல் கதை

நசியா சுஃபியானை சல்மான் கானுடன் சுஃபியான் நசியாவை கத்ரீனா கைப்புடனும் ஒப்பிட்டு அழைத்து கொள்வர். பணத்தை காட்டிலும் இவர்களது காதல் ஆழமானது. இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இது போன்ற ஒரு காதலில் விழுந்த சம்பவங்களில் நசியாதான் முதலிடம். இது போன்ற காதல்களை நாம் சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இந்த வீடு, சொத்துகளை தேவைப்பட்டால் சுஃபியான் பெயரில் எழுதி வைக்கவும் தான் ரெடி என நசியா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+