6 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு! "இந்த" 2 கேள்விகள், 4 டிப்ஸ் முக்கியம்! சீக்ரெட்டை பகிர்ந்த பெண் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நாம் அனைவருமே வேலையில் ஒரு பதவி உயர்வைப் பெறவே பல ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். ஆனால், இங்குப் பெண் ஒருவர் வெறும் 6 ஆண்டுகளில் 5 பதவி உயர்வைப் பெற்றிருக்கிறார். குறுகிய காலத்தில் இத்தனை பதவி உயர்வுகளைப் பெற்றது எப்படி.. இதற்கு அவர் பின்பற்றும் டிப்ஸ் என்ன என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ஜேட் போனகோல்டா என்ற அந்தப் பெண் பிரபல வேலை தேடும் இணையதளமான லிங்ட்இன் தளத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வேலையில் படிப்படியாக முன்னேறவில்லை.. மாறாக ஜெட் வேகத்தில் முன்னேறினார். ஆறு ஆண்டுகளில் 5 பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளார். அசோசியேட் என்ற நிலையில் இருந்து ஆறு ஆண்டுகளில் அவர் சீனியர் நிலையை அடைந்துள்ளார்.

LinkedIn Employee s Career Growth Tips 5 Promotions in 6 Years Revealed
Photo Credit:

இரு விதிகள், 4 டிப்ஸ்

அதன் பிறகு அவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டாராம். இப்போது அவர் அமெரிக்காவின் மியாமியில் வசித்து வருகிறார். சமீபத்தில் பிரபல அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது சீக்ரெட்டை அவர் பகிர்ந்து கொண்டார். உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றில் வேகமாக முன்னேற அவர் இரண்டு விதிகள் மற்றும் அந்த விதிகளைச் செயல்படுத்த நான்கு டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

ஜேட் தனது மேனேஜரிடம் இரண்டு முக்கிய கேள்விகளைக் கேட்டாராம். அதுவே அவருடைய வேலையின் முக்கியமான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவியது. இப்போது எனது வேலையில் எனப் பொறுப்புகள் என்ன என்பது முதல் கேள்வி.. ஒரு பதவி உயர்வைப் பெற்றால் அப்போது என்னுடைய பொறுப்புகள் என்னவாக இருக்கும். இது இரண்டாவது கேள்வி.

இரு கேள்விகள்

முதல் கேள்வி, அவர் தனது தற்போதைய வேலையை என்ன.. அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவியது. நாமாக ஒன்று நினைத்துக் கொண்டு செயல்படுவதை விட இதுபோல சீனியர் பணியை விளக்கினால் இன்னுமே திறமையாகச் செயல்பட உதவுகிறதாம். இது தினசரி என்ன செய்ய வேண்டும் என்ற புரிதலை அவருக்குக் கொடுத்தது.

இரண்டாவது கேள்வி அவருக்கு ஒரு தெளிவான இலக்கைக் கொடுத்தது. பதவி உயர்வைப் பெற்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.. மேலும் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பே அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு வேலை செய்யத் தொடங்கினார். அதாவது பதவி உயர்வுக்கு முன்பே சீனியரின் வேலைகள் செய்துள்ளார். இதனால் சீனியர்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். பதவி உயர்வைப் பெறவும் ஈஸியாக உதவியுள்ளது. மேலும், இது குறித்து 4 டிப்ஸ்களையும் பகிர்ந்துள்ளார்

டிப்ஸ் 1: தைரியமாகப் பேசுங்கள் & பொறுப்புகளை ஏற்கவும்

ஜேட் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. சேல்ஸ் தொடர்பாக பிபிடி செய்ய சொன்னபோது, அவரே தானாக அதை பிரசன்ட் செய்யவும் முன்வந்தார். ஷேர் ஹோல்டர் மீட்டிங்கிலும் எல்லா வேலைகளையும் செய்துள்ளார். இது போன்ற கவனிக்கத்தக்கச் செயல்களை யாரும் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது.

டிப்ஸ்2: முடிவுகளைக் காட்டுங்கள்

இதுபோன்ற மீட்டிங்குகளை முன்னின்று நடத்தியதால் சீனியர்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துள்ளது. அவர் யார் என விசாரித்தபோது, அவர் இணை ஊழியர் என்பதை அறிந்து பலர் ஆச்சரியப்பட்டனர். அவர்களின் ஊக்கம் அப்படியே பதவி உயர்வாக மாறியுள்ளது. உங்கள் வேலையை நிரூபித்துவிட்டால் தானாகப் பதவி உயர்வு கிடைக்கும்.

டிப்ஸ் 3: விரும்பும் வேலையைச் செய்யுங்கள்

பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக மட்டும் வேலை செய்யாதீர்கள். உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் சவால் விடும் வேலைகளைச் செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் சோர்வடைந்து, விரும்பாத வேலையைச் செய்யும் அபாயம் உள்ளது. பிடித்த வேலையைத் தான் செய்கிறோம் என்பதை உறுதி செய்யுங்கள்.

டிப்ஸ் 5: தற்போதைய வேலையை சிறப்பாகச் செய்யுங்கள்

கூடுதல் பணிகளைச் செய்தாலும், உங்கள் முக்கிய வேலை தவறக்கூடாது. பதவி உயர்வுக்கு மற்ற வேலைகள் உதவும் என்றாலும் பிரதான வேலையை புறக்கணிக்கவே கூடாதாம். அதுவே எல்லாவற்றுக்கும் தொடக்கம் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+