For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலிய நாவலாசிரியர் பிளாங்கனுக்கு புக்கர் பரிசு

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் ரிச்சர்ட் பிளாங்கனுக்கு நடப்பாண்டுக்கான மேன் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டு முதல் உலக அளவிலான சிறப்பான ஆங்கில இலக்கியங்களுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் பிளாங்கினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Man Booker Prize: Richard Flanagan wins for wartime love story

2வது உலகப் போரின் போது, தாய்லாந்து - பர்மா இடையே மரண ரயில்பாதை எனப்படும் ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதை அமைக்க பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர் உயிரிழந்தனர்.

இதனைத் தழுவி "தி நேரோ ரோடு டு த டீப் நார்த்" என்ற நாவலை எழுதியதற்காக பிளாங்கினுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது 50 ஆயிரம் பவுண்ட் மதிப்புடையதாகும்.

புக்கர் பரிசு பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிளாங்கன், நான் பெரும் பணக்காரர் அல்ல என்றும், இந்த பரிசு என்னை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் என்றார்.

English summary
Australian author Richard Flanagan has won the £50,000 Man Booker Prize for his wartime novel The Narrow Road to the Deep North.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X