ஹலோ, என் கேர்ள் பிரண்ட்டைத் தொடாதீங்க.. ஒபாமாவை அதிர வைத்த சிகாகோ குடிமகன்

சிகாகோவில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காக பராக் ஒபாமா வந்திருந்தார். அவருக்கான வாக்குச் சாவடிக்குப் போன ஒபாமா அங்கு வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார்.
அவருக்கு முன்பு அயா கூப்பர் என்ற பெண்ணும்,அவருக்கு முன்பு கூப்பரின் காதலர் மைக்கும் நின்றிருந்தனர். அயா, தனக்குப் பின்னால் நின்றிருந்த ஒபாமாவிடம் சகஜகமாகப் பேசினார். இதைப் பார்த்த மைக், ஒபாமாவிடம் வந்து, என் காதலியைத் தொட்டுப் பேசாதீங்க என்று கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஒபாமா. உடனே மைக்கிடம், இ்லலை அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை என்றார் பட்டென்று. இதைக் கேட்டு சங்கடமாகிப் போன மைக், ஒபாமாவிடம் ஸாரி கேட்டார்.
பின்னர் அயாவும், ஒபாமாவிடம் வருத்தம் தெரிவித்தார். அதற்கு ஒபாமா, காரணமில்லாமல் அவர் டென்ஷனாகி விட்டார். பொறாமைதான் என்று அயாவிடம் சிரித்தபடி கூறினார் ஒபாமா.
பின்னர் தொடர்ந்து, இதைப் பற்றி வீட்டுக்குப் போனதும், குடும்பத்தாரிடம், நண்பர்களிடம் சொல்லிமகிழலாம் என்று அயாவிடம் சிரித்தபடி கூறிய ஒபாமா, ஆமாம், உன் காதலர் பெயர் என்ன என்று கேட்டார்.
அதற்கு அப்பெண், அவரது பெயர் மைக் என்றார். பின்னர் ஒபாமா, மைக் இப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒரு முட்டாள் என்றார். ஆமாம், அவர் முட்டாள்தான் என்று அயாவும் சிரித்தபடி கூறினார்.
இதைக் கேட்டு ஒபாமவும் வாய் விட்டுச் சிரித்தார். பின்னர் அந்தப் பெண்ணை செல்லமாக கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். பின்னர் அயாவிடம், இப்போது மைக்குக்கு ரொம்பப் பொறாமை வரும் பார் என்றும் சிரித்துக் கொண்டே கூறினார்.
பின்னர் அயா வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர் என்னைக் கட்டிப்பிடித்து செல்லமாக முத்தமிட்டார். கன்னத்தில் மட்டுமே முத்தம் கொடுத்தார். மிஷல், தயவு செய்து என்னை விரட்டிக் கொண்டு வந்து விடாதீர்கள் என்றார் சிரித்தபடி.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications