For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிட்னியை தானமாக கொடுத்த காதலன்.. ஆப்ரேசனுக்கு பிறகு கழட்டிவிட்ட காதலி.. புலம்பும் டிக்டாக் தேவதாஸ்!

Google Oneindia Tamil News

மெக்சிகோ: "நெஞ்சிருக்கும் வரை" நரேன் போல மெக்சிகோ இளைஞர் செய்த காரியம் அனைவரையும் வியக்கச் செய்தது என்றால், இதற்குப் பின்பு அவரது காதலி செய்த காரியம் இவரையே திகைக்கச் செய்துள்ளது.

மெக்சிகோ நாட்டின் பாஜா கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் உசீல் மார்டினெஸ் (Uziel Martínez). இவர் இப்போது வெளியிட்டுள்ள ஒரு டிக்டாக் வீடியோ தான் இணையத்தைக் கலக்கி வருகிறது.

இந்தியாவுக்குள் 5 கி.மீ ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை-இலங்கை அதிகாரிகள் ஒப்புதல் இந்தியாவுக்குள் 5 கி.மீ ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை-இலங்கை அதிகாரிகள் ஒப்புதல்

மெக்சிகோ நாட்டில் நடந்துள்ள இந்த உசீல் மார்டினெஸின் "உன்னை நினைத்து" கதையைக் கேட்டால், அந்த கல்லும் கண்ணீர் விடும் என்ற ரேஞ்சுக்கு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். அப்படி என் செய்தார்.

 கிட்னி தானம்

கிட்னி தானம்

அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். காதல் என்றால் சும்மா இல்லை வேற லெவல் காதல் இது. நம்ம ஊர் பசங்க பெண்களுக்கு கிஃப்ட்களை மட்டும் தான் அள்ளி தருவார்கள். ஆனால் இவர், தனது கிட்னியையே எடுத்துத் தந்துள்ளார். அதாவது தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதால் அதைத் தானமாகக் கொடுத்துள்ளார்.

 ஷாக் ஆகிவிட்டார்

ஷாக் ஆகிவிட்டார்

"நெஞ்சிருக்கும் வரை" நரேன் போல இவர் செய்த காரியம் அனைவரையும் வியக்கச் செய்தது என்றால், இதற்குப் பின்பு அவரது காதலி செய்த காரியம் இவரையே திகைக்கச் செய்துள்ளது. அதாவது கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் இவரது காதலி இவருடன் பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன இந்த மெக்சிகோ தேவதாஸ் தனது டிக்டாக்கில் புலம்பித் தள்ளியுள்ளார்..

 ஆப்ரேஷன் முடிந்து ஒரே மாதம்

ஆப்ரேஷன் முடிந்து ஒரே மாதம்

இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் கிடைக்கவில்லை என்பதால் நான் எனது காதலியின் தாயின் உயிரைக் காக்க எனது கிட்னியை தானமாகக் கொடுத்தேன். ஆப்ரேஷனும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், ஆப்ரேஷன் நடந்து ஒரே மாதத்தில் என்னுடன் பிரேக்அப் செய்து கொண்டு வேறு ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டார்" என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ டிக்டாக்கில் வேகமாகப் பரவியது. பல்வேறு ஆண்களும் தங்கள் காதலிகளால் எப்படி நடத்தப்பட்டோம் என்ற அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

 வெறுக்கவில்லை

வெறுக்கவில்லை

இந்த வீடியோ வெளியான சில நாட்களில் சுமார் 14 மில்லியன் பேரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டது. இதற்கு நெட்டிசன்கள் கொடுத்த ஆதரவு உசீல் மார்டினெஸை இந்த மோசமான பிரேக்அப்பில் இருந்து மீண்டு வர உதவியுள்ளது. இது தொடர்பாக அவர் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் இப்போது நன்றாக இருக்கிறேன். அவரும் நன்றாகவே இருக்கிறார். நாங்கள் இப்போது நண்பர்களாக இல்லை. ஆனால் ஒருவரையொருவர் வெறுக்கவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 மீண்டும் தவறு செய்ய முடியாது

மீண்டும் தவறு செய்ய முடியாது

இதே தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நெட்டின்சன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த உசீல், "என்னிடம் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தன. அதில் ஒன்றை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். எனவே இந்த தவற்றை என்னால் நிச்சயம் மீண்டும் செய்ய முடியாது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் டிக்டாக் மட்டுமின்றி இணையம் முழுவதும் பரபரப்பாகியுள்ளது.

English summary
A man said that his girlfriend dumped him and married someone else a month after he donated his kidney to her mother. Mexico man donate's his kidney to his girl friend's mother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X