For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னதான் அவசரமா இருந்தாலும்.. அதுக்காக இப்படியா.. ஒண்ணுகூட உருப்படியாத் தெரியலையே!

வீட்டில் உள்ள பொருட்களை விற்பதற்காக ஒருவர் பதிவு செய்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: வேலைநிமித்தமாக வெளிநாடு செல்லும் நபர் ஒருவர், தன் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்காக இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பேசுபொருளாகி இருக்கிறது.

முன்பெல்லாம் பழைய பொருட்களை விற்க வேண்டும் என்றால் அதற்கென உள்ள நிறுவனங்களை அணுகுவார்கள், இல்லையென்றால் பழைய பேப்பர் கடையில் பாதி விலைக்கு விற்று விடுவர்கள். அங்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை. இணையத்தின் உதவியால் நேரடியாக ஆன்லைன் தளங்கள் மூலம் நாம் விரும்பிய விலைக்கு பொருட்களை விற்கும் வசதி வந்துவிட்டது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை ரிலீஸ் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை ரிலீஸ்

நாம் விற்க நினைக்கும் பொருட்களை புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றம் செய்தால் போதும், அதனை வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ள முடியும். அப்படியாக தனது வீட்டில் உள்ள பொருட்களை விற்க நினைத்து, இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர்

அவசர முடிவு

அவசர முடிவு


மலேசியாவில் வசித்து வரும் முகம்மது சையபிக் என்ற அந்நபருக்கு, ஆஸ்திரேலியாவுக்கு பணிமாற்றம் கிடைத்துள்ளது. இதனால் தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களையும் விற்றுவிட்டு ஆஸ்திரேலியா செல்ல அவர் முடிவு செய்தார்.

மன்னிப்பு

மன்னிப்பு

எனவே தன் வீட்டில் உள்ள பொருட்களை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் அவர். அதில், 'அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்கிறேன். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை அவசரமாக விற்பனை செய்யப் போகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். கூடவே, 'மன்னித்து விடுங்கள். அவசரமாக எடுத்ததால் புகைப்படங்கள் அழகாக இல்லை' எனவும் அவர் கூறியிருந்தார்.

ஒன்றுகூட தெளிவில்லை

ஒன்றுகூட தெளிவில்லை

இந்தப் புகைப்படங்கள் மூலம்தான் தற்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் சையபிக். அவசரகதியில் புகைப்படம் எடுக்கும்போது, அதில் அழகியலை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் அதற்காக இவ்வளவு அவசரமாகவா புகைப்படங்களை எடுப்பது என விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது அந்தப் புகைப்படங்கள். காரணம் அவை ஒன்றுகூட தெளிவாக இல்லாமல், ப்ளர்ராக இருப்பதுதான்.

எல்லாமே கலங்கல்

எல்லாமே கலங்கல்

வரவேற்பரை, அடுப்படி என வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளில் இருந்தும் பொருட்களை விற்பதற்காக அவர் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் பாவம் ஒன்றுகூட தெளிவாக இல்லை. ஓடிக் கொண்டே எடுத்திருப்பாரோ என சந்தேகப்படும் அளவிற்கு ஒவ்வொரு புகைப்படமும் கலங்கலாக இருக்கிறது.

இதெல்லாம் ஓவருங்க!

இதெல்லாம் ஓவருங்க!

பொருட்களை வாங்குவார்களோ இல்லையோ மறக்காமல் இந்தப் புகைப்படங்களை கலாய்க்க ஒன்றுகூடி விட்டனர் நெட்டிசன்கள். 'ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு அவசரம் ஆகாது..', ஒருவேளை இந்தப் புகைப்படங்கள் எடுக்கும்போது அங்கு நில அதிர்வு ஏற்பட்டிருக்குமோ..', 'உண்மையிலேயே மிகவும் அவசரமாகத்தான் வீட்டைக் காலி செய்கிறார் போல..', 'புது வேலைக்கு செல்வதற்கு இவ்வளவு ஆர்வமா..' என விதவிதமாக கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

English summary
A Malaysian man who is flying to Australia for his new job decided to sell his household items. He posted pictures of his home with hopes of selling it "urgently". However, the pictures have left netizens in splits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X