லண்டனில் நோன்பு திறந்துவிட்டு வீட்டிற்கு சென்ற முஸ்லீம்கள் மீது வேன் மோதி தாக்குதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் சாலையோரம் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் பலர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஃபின்ஸ்பரி பார்க்கில் உள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Many hurt as vehicle rams pedestrians in North London

இந்நிலையில் பலர் பலியாகியிருக்கக்கூடும் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நோன்பு திறந்துவிட்டு வீட்டிற்கு சென்ற முஸ்லீம்கள் என்று கூறப்படுகிறது.

அந்த வேன் வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் மீது மோதியதாக இங்கிலாந்து முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மான்செஸ்டரில் நடந்த இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் தற்போது வேன் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A number of casualties were reported after a vehicle struck pedestrians in North London. One person has been arrested following the incident on Seven Sisters Road in Finsbury Park, BBC reported. Officers were called at 12.20 BST and are at the scene with other emergency services, the Metropolitan Police said.
Please Wait while comments are loading...