For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘வளர்ந்தாலும் நீ இன்னும் சிறு பிள்ளைதான்’.... ஹேப்பி பர்த்டே மிக்கிமவுஸ்

Google Oneindia Tamil News

புளோரிடா: செல்லக் குழந்தைகளின் சினேகிதனான மிக்கி மவுசிற்கு இன்றோடு 84 வயஹ்டு முடிந்து 85வது வயது பிறக்கிறது. மிக்கி மவுஸ் மக்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது ஏறக்குறைய 84 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நன்னாளில் தான்.

மிக்கியின் 85வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அதன் வாழ்க்கை வரலாறு குறித்தான வீடியோ தொகுப்பை வெளியிட்டு கவுரவப் படுத்தியுள்ளது வால்ட் டிஸ்னி வேர்ல்ட்.

வெறும் கார்ட்டூன் கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் மேலும் பல சிறப்புகளைப் பெற்ற மிக்கி மவுஸ் கடந்து வந்த பாதை....

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

உலக புகழ் பெற்ற அமெரி்க்க சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், ஓவியர் , கார்ட்டூனிஸ்ட் என பன்முகத் திறமையாளரான வால்ட் டிஸ்னி, தனது அண்ணன் ராய் டிஸ்னியுடன் இணைந்து, வால்ட் டிஸ்னி என்ற பெயரில், சினிமா தயாரிக்கும் ஸ்டூடியோவை 1928-ம் ஆண்டு ஹாலிவுட்டில் உருவாக்கினார்.

மோர்டைமர்...

மோர்டைமர்...

வால்ட் டிஸ்னியின் கனவு கதாபாத்திரம் தான், மிக்கி மவுஸ். முதலில் மிக்கிக்கு ‘மோர்டைமர்' என்றே பெயரிட்டார் டிஸ்னி. ஆனால், அவரது மனைவி லில்லியன் தான், கணவரின் கனவு கார்ட்டூன் கேரக்டடுக்கு ‘மிக்கி மவுஸ்' எனப் பெயர் வைத்தார்.

ரேபிட் மோய்... மிக்கி வந்தது

ரேபிட் மோய்... மிக்கி வந்தது

கட்டாயத்தின் பேரில் டிஸ்னி உருவாக்கியது மிக்கி மவுஸ் கதாபாத்திரம். காரணம் அதற்கு முன்னர் அவர் உருவாக்கிய லக்கி ரேபிட்னின் உரிமையை அவர் துரதிர்ஷ்டவசமாக இழந்தது தான்.

கலக்கல் மிக்கி...

கலக்கல் மிக்கி...

சிவப்பு நிற கால்சட்டையும், மஞ்சள் நிற ஷீவும், வெள்ளை நிற கையுறையும் என பின்னாளில் மிக்கி மவுஸ், கார்ட்டூனாகவும், காமிக் புத்தகங்களாகவும், டெலிவிஷன் தொடர்களாகவும், சினிமா படங்களாகவும் பிரபலமாகி விட்டது.

நண்பர்கள்...

நண்பர்கள்...

மிக்கி மவுசின் காதலியாக மின்னி மவுஸ் என்ற செயற்கை கதாபாத்திரமும், அவருடைய நண்பர்கள் ஹார்ஸ் காலர், டொனால்ட் டக், ஹோப்பி ஆகியோரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.

பிறந்தநாள்...

பிறந்தநாள்...

மிக்கி மவுஸின் அதிகாரப்பூர்வமான முதல் படம் ‘ஸ்டீம் போட் வில்லி'. இது கடந்த 1928ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி ரிலீசானது. எனவே, இந்த நாளையே மிக்கி மவுசின் பிறந்த தினமாகக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் அதன் ரசிகர்கள்.

பிரபலப் படங்கள்...

பிரபலப் படங்கள்...

மிக்கி மவுசின் ஸ்டீம் போட், மிக்கீஸ் ஆர்பன்ஸ், திரீ லிட்டில் பிக்ஸ் போன்ற படங்கள் மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்ற படங்கள்.

சாதனை மேல் சாதனை...

சாதனை மேல் சாதனை...

அதேபோல், ஓப்ரே ஹவுஸ், கிறிஸ்துமஸ் கேரல், வாலண்டைன், போட் பில்டர்ஸ் , ஹவுஸ் ஆப் மவுஸ் போன்ற படங்களும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றன. அமெரி்க்காவின் பிரசித்தி பெற்ற வார்னர் நிறுவன தயாரிப்புகளுடன் கூட, மிக்கி மவுஸ் படைப்புகள் போட்டியிட்டு சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் நாயகன்

ஆஸ்கார் நாயகன்

மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு படைப்புகள் 26 ஆஸ்கார் உள்பட பல்வேறு உலக விருதுகள் பெற்றுள்ளன. இதில் ஒரே ஆண்டில் 4 ஆஸ்கார் பெற்றது, இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது. 7 எம்மி விருதுகளும், இவரது படைப்புகள் பெற்றுள்ளன.

டிஸ்னி லேண்ட்....

டிஸ்னி லேண்ட்....

‘தனது கனவு திட்டமான வால்ட் டிஸ்னி என்ற உலக உல்லாச நகரத்தை திறந்து வைக்க வில்லையே' என்ற ஏக்கத்துடன் 1966-ம் ஆண்டு , டிசம்பர் 16-ந்தேதி நுரையீரல் புற்று நோயால் மரணமடைந்தார் உலக சாதனை படைத்த டிஸ்னி.

ஆஸ்கார்...

ஆஸ்கார்...

டிஸ்னியின் மறைவுக்கு பின்பும், கலை உலகில் அவர் செய்த சாதனைக்கான ஆஸ்கார் விருது அவரை தேடி வந்தது. இது அவரது மணி மகுடத்தில் மேலும் ஒரு வைர கல்லாக அமைந்தது.

மிக்கியின் குரல்...

மிக்கியின் குரல்...

ஆரம்ப காலங்களில் வெளிவந்த படங்களில் மிக்கி மவுசிற்கு டிஸ்னிதான் பிண்ணனிக் குரல் கொடுத்திருந்தார். அதன் பின்னர், வெனி ஆல்வின் அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டு கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் மிக்கிக்காகப் பேசினார்.

பெருமை....

பெருமை....

டிஸ்னிலேண்ட் சென்றால் மிக்கி மவுஸ் வேடமணிந்த மனிதர்களை நேரில் சந்திக்க இயலும். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து அதிபர்களுமே மிக்கி மவுசுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதெப்படி இருக்கு....

இதெப்படி இருக்கு....

'That sure is swell' இது தான் மிக்கியின் பிரபலமான பாவனைகளில் ஒன்று.

அம்மாடியோவ்....

அம்மாடியோவ்....

கிட்டத்தட்ட உலக அள்வில் வர்த்தகத்தில் 9.2 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்த சிராப்பும் மிக்கிக்கு உண்டு. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 57 ஆயிரத்து 302 கோடியே 20 லட்சம்.

ஹேப்பி பர்த்டே மிக்கி.....

ஹேப்பி பர்த்டே மிக்கி.....

குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழத்தும் மிக்கியின் சேவை இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்...

English summary
It has been 85 years since Mickey Mouse introduced himself via the short film "Steamboat Willie." Now, modern-day Walt Disney Animation Studios goes back in time with a short film starring Mickey Mouse himself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X