For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ் வேர்ல்ட்.. இந்தியாவின் பிரியதர்ஷினி சாட்டர்ஜிக்கு 17வது இடம்தான்!

உலக அழகிப் போட்டியில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மேரிலண்ட்: அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில் நகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மிஸ் வேர்ல்டு 2016 என்ற உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் போர்டோரிகா நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே என்ற 19 வயது பெண் உலக அழகி பட்டம் வென்றார்.

Miss World 2016: India's Priyadarshini Chatterjee is in 17th place

இந்தப் போட்டியில் இந்திய சார்பில் ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி பங்கேற்றார். இந்தப் போட்டியில் ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி போல் உலக அழகிப் பட்டத்தை தட்டிச் செல்லும் கனவோடு கலந்து கொண்ட ப்ரியதர்ஷினி சாட்டர்ஜிக்கு 17வது இடமே கிடைத்தது. என்றாலும், முதல் 20 இடத்திற்குள் தான் இடம் பெற்றிருப்பது நினைத்து அவர் நிம்மதி பெருமூச்சைவிட்டுக் கொண்டார். குவஹாட்டியைச் சேர்ந்த டெல்லியில் வளர்ந்த பெண்ணான ப்ரியதர்ஷினி சமூகவியலில் பட்டப்படிப்பு படித்தவராவார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்ட முதல் பெண் இவர் என்ற பெருமையை ப்ரியதர்ஷினி தட்டிச் சென்றுள்ளார்.

2000ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா உலக அழகியாக பட்டம் வென்றதற்கு பிறகு இந்தியாவில் இருந்து யாரும் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1966ம் ஆண்டு முதன் முறையாக ரீட்டா பரிதா உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு 1994ம் ஆண்டில்தான் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றார். அடுத்த சில ஆண்டுகளிலேயே 1999ம் ஆண்டே யுக்தா முகியும் உலக அழகிப் பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Delhi-based girl, Priyadarshini was the first candidate from the northeastern region at the Miss World pageant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X