For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எகிப்தில் கண்டறியப்பட்ட நகைகள் அணிந்த “மம்மி” – ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தின் கல்லறை ஒன்றில் நகைகள் அணிந்திருந்த பெண் "மம்மி" ஒன்று கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் தென் பகுதியில் நைல் நதிக்கரையில் உள்ள பழங்கால கல்லறைகளை ஸ்பெயின் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் ஒரு கல்லறையில் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சவப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதன் உள்ளே பெண் மம்மி இருந்தது.

30 வயதான பெண் மம்மி:

30 வயதான பெண் மம்மி:

அந்த பெண் மம்மி கடந்த 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்த மம்மி இறந்த போது 30 வயது இருந்திருக்கும்.

உடல் பூரா நகைகள்:

உடல் பூரா நகைகள்:

அதன் உடலில் தங்க மற்றும் வெள்ளி நகைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

அந்தக் காலத்திலேயே அவ்ளோ நகை:

அந்தக் காலத்திலேயே அவ்ளோ நகை:

நெக்லஸ், பிரேஸ்லெட்டுகள் மற்றும் தொங்கல்கள், டாலருடன் கூடிய தங்க நகைகள் அணிவிக்கப்பட்டிருந்தது.

சேதமடைந்த கல்லறை:

சேதமடைந்த கல்லறை:

புதைக்கப்பட்ட பெட்டி சீல் வைத்து மூடப்பட்டிருந்தது. இது புதைக்கப்பட்ட கல்லறை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

நகைகளை திருட முயற்சி:

நகைகளை திருட முயற்சி:

அதை உடைத்து அதற்குள் புதைக்கப்பட்ட மம்மியிடம் இருந்து திருட கொள்ளையர்கள் முயன்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

English summary
A 4,000-year-old female mummy nicknamed "Lady of the Jewels" wearing her ornaments has been discovered by Spanish archaeologists on the west bank of the river Nile in southern Egypt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X