For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா மெல்ல நட மெல்ல நட.. விண்வெளியில் 5 மணி நேரம் நடந்த 2 அமெரிக்க வீரர்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசாவைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி விண்வெளியில் நடந்து சில வேலைகளைச் செய்து பின்னர் நிலையத்துக்குத் திரும்பியுள்ளனர்.

மார்ச் 1ம் தேதி இந்த விண்வெளி நடை நடந்தது. இது அவர்களது 3வது சுற்று விண்நடையாகும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் சில பாகங்களை சேர்க்கும் பணிக்காக இந்த விண்நடையை அவர்கள் மேற்கொண்டனர்.

இந்த விண் நடைக்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. அதாவது எதிர்காலத்தில் விண்வெளிக்கு வரும் போயிங் ரக விமானங்கள், வர்த்தக ரீதியிலான விண்வெளி டாக்சி சேவையில் இடம் பெறும் விண்கலங்களை விண்வெளியில் நிறுத்துவதற்குத் தேவையான வசதிகளைச் செய்யும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியில் ஈடுபடுவே இவர்கள் இந்த விண்நடையில் ஈடுபட்டனர்.

எக்ஸ்படிஷன் 42...

எக்ஸ்படிஷன் 42...

எக்ஸ்படிஷன் 42 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்நடையில் டெர்ரி விர்ட்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ஈடுபட்டனர். 400 அடி கேபிள் ஒன்றையும், பல ஆன்டென்னாக்களையும் நிறுவும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

5 மணி நேர நடை...

5 மணி நேர நடை...

மொத்தம் 5 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு இந்த விண்நடை இடம் பெற்றது. இது டெர்ரிக்கு 3வது விண் நடையாகும். வில்மோருக்கு இது 4வது நடை.

19 மணி நேரம்...

19 மணி நேரம்...

டெர்ரி தனது 3 விண் நடையின்போது மொத்தமாக 19 மணி நேரம் 2 நிமிடங்களுக்கு விண்வெளியில் இருந்துள்ளார். வில்மோர் 25 மணி நேரம் 36 நிமிடங்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளார்.

மொத்தம் 187 விண் நடைகள்...

மொத்தம் 187 விண் நடைகள்...

நாசாவைச் சேர்ந்தவர்கள் இதுவரை மொத்தமாக 1171 மணி நேரம் 29 நிமிட நேரத்துக்கு விண்வெளியில் செலவிட்டுள்ளனர். மொத்தம் 187 விண் நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வணிகரீதியான பயணங்கள்...

வணிகரீதியான பயணங்கள்...

வரும் ஆண்டுகளில் போயிங் நிறுவனத்தின் சிஎஸ்டி 100 மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் விண்கலங்கள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிக ரீதியிலான பயணங்களை மேற்கொள்ளவுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வகத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வருவது, ஆட்களை அனுப்புவது போன்றவற்றில் இவையும் ஈடுபடுத்தப்படவுள்ளன. அவற்றை நிறுத்துவதற்குத் தேவையான வசதிகளை தற்போது நாசா செய்து வருகிறது.

சோதனை பயணம்...

சோதனை பயணம்...

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது டிராகன் வி2 பயணிகள் விண்கலத்தை இறுதிப்படுத்தி 2017 தொடக்கத்தில் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அதேபோல 2017 ஏப்ரல் மாதத்தில் போயிங் நிறுவனத்தின் சிஎஸ்டி 100 சோதனை பயணம் நடைபெறவுள்ளது.

English summary
NASA astronauts successfully ended their third and last spacewalk on March 1 to reassemble parts of the International Space Station (ISS) and create parking slots for Boeing and Space Exploration Technologies (SpaceX) which will provide commercial space taxis in the near future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X