For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் ஸ்பூன் வடிவில் மிதக்கும் பாறை... !

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படத்தில் ஸ்பூன் வடிவில் உள்ள மிதக்கும் பாறை போன்ற தோற்றம் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியூரியாசிட்டி விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயில் உள்ள மலைகள், பாறைகள், மண்ணின் தன்மை, கிரகத்தின் அமைப்பு உள்ளிட்டவற்றை போட்டோக்களாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

பெரிய ஸ்பூன்...

பெரிய ஸ்பூன்...

அந்தவகையில், கடந்த வாரம் கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பெரிய ஸ்பூன் போன்ற அமைப்புடைய பாறை ஒன்று உள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

10 செ.மீ. தான்...

10 செ.மீ. தான்...

இந்த ‘ஸ்பூன்' போன்ற பாறையானது 10 செ.மீ.க்கும் குறைவான அளவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வித்தியாசமான பாறைகள்...

வித்தியாசமான பாறைகள்...

இந்நிலையில், தற்போது அந்த ஸ்பூன் வடிவ பாறையைச் சுற்றியுள்ள இடங்களையும் கியூரியாசிட்டி படமெடுத்து அனுப்பியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பாறைகள் வித்தியாசமான அமைப்பில் காணப்படுகின்றன.

காற்றில் மிதக்கிறது...?

காற்றில் மிதக்கிறது...?

மேலும், அந்த புகைப்படத்தில் மற்றொரு ‘ஸ்பூன்' வடிவமைப்புடைய பாறை ஒன்று அந்தரத்தில் மிதப்பது போன்று உள்ளது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The images sent back from Nasa’s Mars Curiosity rover often contain strange rock formation. Earlier this week, one group claims they have seen a ‘floating spoon’ on Mars captured by Curiosity’s Mastcam on sol 1089 of the mission. Now, a new wider version of the image reveals more 'spoons' and even something resembling a chopstick.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X