For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்கல் ஒன்றை பாதை மாற்ற.. குட்டி "ஸ்பேஸ் கிராப்டை" அனுப்பிய நாசா - ஸ்பேஸ் எக்ஸ்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி பெரிய விண்கல் வந்து விழும், மொத்த மனித குலமும் அழிவது போன்ற காட்சிகளையும் நாம் பார்த்து இருப்போம்.

சில இடங்களில் இப்படிப்பட்ட விண்கற்களை அணு ஆயுத ராக்கெட் கொண்டு தகர்ப்பது போன்ற காட்சிகளும் கூட அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு விண்கல் தாக்குதலுக்கு தயாராகும் வகையில்தான் டார்ட் மிஷனை நாசா கையில் எடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

டார்ட்

Double Asteroid Redirection Test (Dart) அதாவது விண்கல் பாதை விலக்க சோதனை திட்டம்தான் நாசா கையில் எடுத்துள்ள திட்டம். எதிர்காலத்தில் விண்கல் பூமியை தாக்க வரும் போது அதை ஸ்பேஸ் கிராப்ட் உதவியுடன் பாதை மாற்றுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கான சோதனையையே இப்போதே செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக Dart மிஷனை நாசா கையில் எடுத்துள்ளது.

என்ன செய்யும்

என்ன செய்யும்

Dart மிஷனின் படி பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos என்ற விண்கல்லை நோக்கித்தான் இந்த ஸ்பேஸ் கிராப்ட் செல்கிறது. Dimorphos அருகிலேயே இருக்கும் Didymos என்ற இன்னொரு விண்கல்லை சுற்றி வருகிறது. அதாவது Didymos விண்கல்லுக்கு நிலவு போல Dimorphos சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

தாக்க திட்டம்

இந்த 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos விண்கல்லைதான் நாசாவின் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் தாக்க போகிறது. இன்று விண்ணில் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக சில நிமிடங்களுக்கு முன் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையை கடந்து இது வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து விண்கல்லை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகிறது.

எப்போது செல்லும்

அடுத்த வருடம் செப்டம்பர் இறுதியில் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் இந்த விண்கல் அருகே செல்லும். அப்போது Didymos விண்கல்லை சுற்றும் Dimorphos விண்கல்லை லேசாக தாக்கி அதன் பாதையை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் மாற்றும். அவ்வளவுதான். அதாவது இவ்வளவு மில்லியன் தூரம் பயணித்து விண்கல் ஒன்றின் பாதையை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் லேசாக மாற்ற போகிறது. அதுவும் கூட சில மீட்டர்கள் மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும்.

ஏன்

ஏன்

இது வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் எதிர்காலத்தில் பூமியை நோக்கி விண்கல் வந்தால் அதை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் மூலம் பாதை மாற்ற முடியும். இப்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் அடுத்த 12 மாதங்களுக்கு பயணம் மேற்கொண்டு விண்கல் அருகே செல்லும். இந்த விண்கல் அருகே டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் சென்றதும் அதில் இருந்து LICIA க்யூப் என்ற சாட்டிலைட் பிரிந்து செல்லும்.

வீடியோ

Dimorphos விண்கல்லை தாக்கி அதன் பாதையை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் எப்படி மாற்றுகிறது என்பதை LICIA க்யூப்சாட்டிலைட் மொத்தமாக படம் பிடித்து அனுப்பும். உலகிலேயே இதுதான் விண்கல் ஒன்றின் பாதையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் திட்டம் ஆகும். இந்த Dimorphos 163 மீட்டர் உயரம் கொண்டது. இதை 19 மீட்டர் மட்டுமே அளவு கொண்ட டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் தாக்க போகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 325 மில்லியன் டாலர் ஆகும்.

English summary
NASA sends DART spacecraft succcessfully with Space X Falcon 9 rocket to crash Dimorphos Asteroid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X