For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாள பிரதமர் கே.பி ஒளி திடீர் ராஜினாமா!

By Arivalagan
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாள அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து அந்நாட்டின் பிரதமர் கே.பி ஒளி தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் கே.பி ஒளி. அந்த நாடு அரச வம்ச ஆட்சியில் இருந்து வெளிவந்து புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராக கடந்த 2015-ஆம் ஆண்டு கே.பி ஒளி பொறுப்பேற்றார்.

Oli

கே.பி ஒளி தலைமையிலான ஆட்சிக்கு நேபாள மாவோயிஸ்ட்டுகள் தங்கள் ஆதரவை அளித்து வந்தனர். இந்நிலையில் சமீப கலமாக அவரது ஆட்சி மீது அதிருப்தி எழுந்து வந்தது. நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் அவர் மீது அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை நேபாள மாவோயிஸ்ட் கட்சி விலக்கி கொள்வதாக அறிவித்தது. இததையடுத்து, கேபி ஒளி இன்று மாலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

English summary
Nepal's Prime Minister KP Sharma Oli is set to resign on Sunday after his speech in the House during a no-confidence motion against his government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X