For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புரியும் மொழியில் விடை..' அதிபரின் ட்வீட் நீக்கம்.. பதிலுக்கு ட்விட்டர் தளத்தையே தூக்கிய நைஜீரியா

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரியின் ட்வீட்டை அந்நிறுவனம் நீக்கிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வதையில் ட்விட்டர் தளத்திற்கே நைஜீரியா அரசு தடை விதித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்திற்கு தற்போது பொல்லாத காலம் போலத் தெரிகிறது. பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டு அரசுகளுக்கும் ட்விட்டருக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி வந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதேபோல இந்தியாவிலும் புதிய டிஜிட்டல் விதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி வருகிறது.

நைஜீரியா

நைஜீரியா

இந்தச் சூழ்நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் ட்விட்டர் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டின் அதிபராக உள்ளவர் முகம்மது புஹாரி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக உள்ளார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகர் அபுஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியா

நைஜீரியா


இந்தச் சூழ்நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் ட்விட்டர் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டின் அதிபராக உள்ளவர் முகம்மது புஹாரி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக உள்ளார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகர் அபுஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிபர் முகம்மது புஹாரி

அதிபர் முகம்மது புஹாரி

இதன் காரணமாக நைஜீரியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க அந்நாட்டு அதிபர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரி 1967-1970 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் குறித்த சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சை ட்வீட்

சர்ச்சை ட்வீட்

அந்த ட்வீட்டில் அதிபர் முகம்மது புஹாரி, ''அரசுக்கு எதிராக இன்று செயல்படும் இளைஞர்கள், நைஜீரியா உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தேசம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது அரசுக்கு எதிராக செயல்படுவார்களுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் கொடுக்கவும் தயாராகவே உள்ளோம்" என்று பொருள்படும் வகையில் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்திற்குத் தடை

ட்விட்டர் நிறுவனத்திற்குத் தடை

அதிபர் முகம்மது புஹாரியின் ட்விட்டர் பதிவு போராட்டகார்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, ட்விட்டர் நிறுவனம் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது. இதனால் கடுப்பான அதிபர் முகம்மது புஹாரி, ட்விட்டர் நிறுவனத்தையே நைஜீரியாவில் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
Twitter is completely banned in Nigeria
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X