For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"குழந்தைசாமி" வெடித்த குண்டு... ரோடு பிளந்தது.. விளையாட்டு மைதானம் உடைந்தது!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வட கொரியா நடத்திய அதி பயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனையால் பக்கத்தில் உள்ள நாடான சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. மக்கள் பீதியில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை இந்த சோதனை தூண்டி விட்டு விட்டது. அதை விட முக்கியமாக சீனாவில் பல சாலைகளில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெரிய விளையாட்டு மைதானத்திலும் கிராக்குகள் விழுந்துள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் இது என்பதால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகி விட்டனர்.

தெர்மோ நியூக்ளியார் குண்டு

தெர்மோ நியூக்ளியார் குண்டு

"ரவுடிப் பய" என்று செல்லமாக வல்லரசு நாடுகளால் அழைக்கப்படும் வட கொரியா தொடர்ந்து தலைவலியாகவே இருந்து வருகிறது. அண்டை அசல் நாடுகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

அடுத்தடுத்து டென்ஷன்

அடுத்தடுத்து டென்ஷன்

தொடர்ந்து அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு பெரும் டென்ஷனைக் கொடுத்து வருகிறது வட கொரியா. இந்தநிலையில் அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டு ஒன்றை பரிசோதித்துள்ளதாக கூறியுள்ளது வட கொரியா.

நிலநடுக்கம்

இந்த பயங்கர வெடிகுண்டு சோதனை காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1 ஆக இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

சீனாவுக்கு வந்த நிலச் சிக்கல்

சீனாவுக்கு வந்த நிலச் சிக்கல்

சீனா்வில் பல இடங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டடங்கள் வீடுகள் இடிந்துள்ளன. மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். வட கொரியா சோதனை நடத்திய இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்களில் கூட இது ஏற்பட்டுள்ளது.

ஆடிய நெடுஞ்சாலை

ஒரு நெடுஞ்சாலை நிலநடுக்கத்தால் ஆடியதையும் வீடியோவில் படம் பிடித்துள்ளனர். மேலும் அந்த சாலையிலும் வெடிப்பு உருவாகியுள்ளது. யாஞ்சி என்ற இடத்தில் இந்த நெடுஞ்சாலை ஆடியுள்ளது.

மைதானத்திலும் பெரும் பிளவு

மைதானத்திலும் பெரும் பிளவு

அதே கிராமத்தில் உள்ள சிறார்களுக்கான பெரிய விளையாட்டு மைதானத்திலும் பிளவுகள் ஏற்பட்டு மக்களை கவலைக்குள்ளாகின. அதிரஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

3 நகரங்களில் பாதிப்பு

3 நகரங்களில் பாதிப்பு

சீனாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள யாஞ்சி, ஹியூசுன், சாங் பாய் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சான்ஸே இல்லையே.. சந்தேகப்படும் அமெரிக்கா

சான்ஸே இல்லையே.. சந்தேகப்படும் அமெரிக்கா

ஆனால் வட கொரியா வெடித்ததாக கூறப்படும் ஹைட்ரஜன் குண்டு குறித்து அமெரிக்கா சந்தேகம் கிளப்பியுள்ளது. இந்த குண்டுவெடிப்பால் நிலநடுக்கம் வர வாய்ப்பே இல்லை என்றும் அது கூறுகிறது.

"குழந்தை"யின் விளையாட்டு எப்பத்தான் ஓயுமோ?

குழந்தை தூங்க தாலாட்டு பாடுவார்கள்.. ஆனால் இந்த வட கொரிய குழந்தை (கிம் ஜோங் உன்) பாடும் தாலாட்டால் உலகமே தூக்கம் தராமல் தவித்துக் கொண்டிருக்கிறது. எப்பத்தான் ஓயுமா... இந்த பிள்ளையின் தீராத விளையாட்டு!

English summary
Many Chinese villages nearby North Korean border felt the heat of the Hydrogen bomb test conduected by the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X