For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்பிற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரெட் நோபல் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.

1884ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார். இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருக்கிறார்ஆல்ஃபிரெட் நோபல்.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் பத்தாம் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும். அதே நாளில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jean Pierre Sauvage, Sir Fraser Stoddart and Bernard Feringa win Nobel prize in chemistry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X