சீனா வேண்டாம்.. சவுதிக்காவது வாங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப்.. பின்னணி
இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க நம் நாடு மறுத்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நம் நாட்டை பாகிஸ்தான் அழைத்து வரும் சூழலில் சீனா வேண்டாம். சவுதி அரேபியாவுக்காவது வாங்க பேசலாம் என்று நம் நாட்டிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கெஞ்சியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தி 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்களை நம் நாடு அழித்தது.

நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்ற நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மோதலை கைவிட வேண்டும். நாங்கள் இனி தாக்கமாட்டோம் என்று மண்டியிட்டது. இதையடுத்து நம் நாடும் ஒப்புக்கொண்டது. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது முடிவுக்கு வந்துள்ளது.
ஆனாலும் கூட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு கொடுக்கும் சிந்து நதி நீரை தடுத்து வைத்துள்ளது. இந்த முடிவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதி நீர் என்பது மிகவும் முக்கியம். அங்கு வசிக்கும் 21 கோடி மக்களுக்கு இந்த நதி நீர் தான் முக்கியமானதாக உள்ளது. தற்போது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் சண்டை முடிவுக்கு வந்ததால் சிந்து நிதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று அந்த நாட்டு தலைவர்கள் கெஞ்சி வருகின்றனர்.
ஆனால் நம் நாடோ சிந்து நதி நீரை நிறுத்தியது நிறுத்தியது தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தினால் சிந்து நதி நீர் பற்றி யோசிக்கலாம் என்று கறாராக தெரிவித்துவிட்டது. அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.
இருப்பினும் கூட க இருநாடுகள் இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். நம் நாட்டுடன் பேச்சுவார்த்தையை நடத்தி சிந்து நதி நீரை பெற்று விட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இது கடினமான விஷயம் தான் என்றாலும் கூட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதனை விரும்புகிறார். ஆனால் நம் நாடு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
இந்நிலையில் தான் நம் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ‛‛இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். காஷ்மீர், தண்ணீர், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பேச தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு சீனாவை வைக்க வேண்டாம். சவுதி அரேபியா என்பது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சரியான இடமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சவுதி அரேபியாவுக்காவது வாங்க பேசி பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று ஷெபாஸ் ஷெரீஃப் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளார். ஆனால் நம் நாட்டை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications