For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3000 பேரிடம் பேசினார்.. கசிந்தது ஒபாமாவின் "கொரோனா" ஆடியோ.. டிரம்பிற்கு இனிதான் சிக்கல்.. டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா பரவல் குறித்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்தும் முன்னாள் அதிபர் ஒபாமா பேசிய ஆடியோ ஒன்று இணையம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. டிரம்பிற்கு இந்த ஆடியோ பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Recommended Video

    கசிந்தது ஒபாமாவின் 'கொரோனா' ஆடியோ.. டிரம்பிற்கு இனிதான் சிக்கல்

    அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது நெருங்கி வருகிறது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அதிபர் தேர்தலில் கொரோனா பிரச்சனை அதிக முக்கியத்துவம் வகிக்கும், நிறைய விவாதங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம்ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம்

    ஒபாமா பேசினார்

    ஒபாமா பேசினார்

    இந்த நிலையில் தான் அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்த ஜோ பிடனுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 3000 பேரிடம் ஒபாமா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினார். இதன் ஆடியோ இணையத்தில் கசிந்து உள்ளது. அதில் ஒபாமா, டிரம்ப் குறித்து மறைமுகமாக பேசி உள்ளார்.

    டிரம்ப் என்ன பேசினார்

    டிரம்ப் என்ன பேசினார்

    இதில் பேசிய ஒபாமா, இந்த அதிபர் தேர்தல் மிக முக்கியமானது. நான் என்னுடைய முழு ஆதரவை பிடனுக்கு அளிக்கிறேன். நாம் ஒரு நபரை எதிர்க்கவில்லை, ஒரு கட்சியை எதிர்க்கவில்லை. நாம் இப்போது தேர்தலில் எதிர்கொள்ளும் விஷயம் மிக பெரியது. மிக வலிமையான விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். அதனால்தான் இந்த தேர்தல் மிக முக்கியம் என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

    டிரம்ப் மனநிலை

    டிரம்ப் மனநிலை

    கொரோனாவிற்கு எதிரான மிக மோசமாக நாம் செயல்பட்டு இருக்கிறோம். மிக மோசமான பேரழிவை இது ஏற்படுத்தி உள்ளது . இதற்கு காரணம் ஆட்சியாளர்களின் சுயநலம்தான். எப்போது பிறர் மீது பழியை போடலாம். எப்போது பிற நாட்டுடன் சண்டைக்கு போகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதுதான் கொரோனாவிற்கு எதிரான செயலை, பணியை சிக்கலாக்கி உள்ளது. கொரோனாவினால் அமெரிக்கா மோசமாக பாதிக்க ஆட்சியாளர்களின் இந்த மனநிலை காரணம் ஆகும்.

    சில ஆதாயம்

    சில ஆதாயம்

    சிலர் இதில் சுயநலமாக செயல்படுகிறார்கள். கொரோனா மூலம் நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். நாம் எவ்வளவு பெரிய நாடாக, அரசாக இருந்தாலும் கூட இந்த மனநிலையுடன் செயல்பட்டால் வெற்றிபெற முடியாது. இதனால்தான் பிடன் ஆட்சிக்கு வர வேண்டும், அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று நான் தீவிரமாக உழைக்கிறேன் என்று ஒபாமா தீவிரமாக குறிப்பிட்டு வருகிறார்.

    ஒபாமா ஆதரவு

    ஒபாமா ஆதரவு

    ஒபாமாவின் இந்த ஆடியோ அமெரிக்க அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் குறித்த அவரின் கருத்து, டிரம்பிற்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். அதேபோல் பிடனுக்கு இதனால் ஆதரவு பெருகி உள்ளது. ஒபாமா அமெரிக்க அரசியலில் அதிக ஆதரவு கொண்ட அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பேச்சுக்கு இப்போதும் மக்கள் தீவிர மதிப்பு அளிக்கிறார்கள். இதனால் ஒபாமாவின் பேச்சு டிரம்பின் அதிபர் செகண்ட் இன்னிக்ங்ஸ் கனவிற்கு சிக்கலாக முடியும் என்கிறார்கள்.

    English summary
    Former President Obama audio against Trump makes fire in the US Presidential elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X