ஓமிக்ரான் 21 மணி நேரம், தோலில் உயிர்வாழும்.. பிளாஸ்டிக்கில் 8 நாட்கள் இருக்கும்.. ஆய்வாளர்கள் தகவல்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஒமிக்ரான் வைரஸ் அதிகபட்சமாக 194 மணி நேரங்கள் வரை உயிர் வாழும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.

2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தென்பட்ட கொரோனா மெல்ல மெல்ல உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. 2022லும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அச்சத்தில் இருக்கிறது.

கொரோனா வைரஸின் வேரியண்ட் ஒமிக்ரான் இப்போது உலகெங்கும் அதிவேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸ், பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலு, மிக வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

 ஜப்ப்பான்

ஜப்ப்பான்

ஜப்பானைச் சேர்ந்த கெய்ட்டோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், ஒமிக்ரான் மனிதனின் தோலில் கிட்டத்தட்ட 21 மணி நேரத்திற்கும் மேலாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் தொடர்ந்து எட்டு நாட்களுக்கும் மேலாகவும் உயிருடன் இருக்கும் என்று தெரிவித்தனர்.

 ஒமிக்ரான்

ஒமிக்ரான்

கொரோனாவின் மற்ற வேரியண்ட்டை விட ஒமிக்ரான் வேகமாக பரவ இதுவே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். BioRxiv ப்ரீபிரிண்ட் ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகள் முதலில் தோன்றிய கொரோனாவை விட பிளாஸ்டிக் மற்றும் தோல் பரப்புகளில் இரண்டு மடங்குக்கும் மேல் உயிர்வாழ்வதைக் கண்டறிந்ததுள்ளனர்.

 ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

இதுபோன்ற கொரோனா வேரியண்ட்கள் பரிமாற்றம் அடையும்போது, மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவரை வந்த கொரோனா வைரஸில் ஒமிக்ரான் மட்டும் தான் அதிக ஸ்திரத்தன்மையோடு இருக்கிறது. இதனால் தான் டெல்டா வைரஸை மாற்றி வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரானிலும் தற்போது பல துணை வேரியண்ட்கள் வந்துள்ளன. அவற்றைக் கண்டறிவதும் சுலபமாக இல்லை.

 ப்ளாஸ்டிக்

ப்ளாஸ்டிக்

இந்த ஆய்வில் வைரஸ்களின் ஆயுட்காலம் தெரியவந்துள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களில் கொரோனா வைரஸ் 56 மணி நேரம், ஆல்பா 191.3 மணி நேரமும், பீட்டா 156.6 மணி நேரமும், காமா 59.3 மணி நேரமும், டெல்டா வைரஸ் 114 மணி நேரமும் உயிர் வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், ஒமிக்ரான் வைரஸ் அதிகபட்சமாக 193.5 மணி நேரம் வரை உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 தோல்

தோல்

அதுவே தோலில், கொரோனா வைரஸ் 8.6 மணி நேரம், ஆல்பா 19.6 மணி நேரமும், 19.1-பீட்டா, காமா - 11, 16.8 - டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் 21.1 மணி நேரம் உயிர் வாழும் என்று தெரியவந்துள்ளது. தற்போது உலக அளவில் அதிகமாக பரவும் தொற்றாக ஒமிக்ரான் மாறி வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+