For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறியாமல் 'எல்லை மீறிய' சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் ராணுவம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை தெரியாமல் கடந்து விட்ட 13 வயது இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணும் இந்திய அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்து மனிதநேயம் காண்பித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் ஜான்நாகர் கிராமத்தை சேர்ந்த மன்சார் ஹூசைன் என்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன், குயீ ரட்டா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த நவம்பர் 14ம் தேதி தவறுதலாக கடந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Pakistan army hands over Indian boy who crossed LoC

அவரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கண்டுள்ளனர். உளவாளியாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் முதல்கட்ட விசாரணைகளை சிறுவனிடம் நடத்தினர். அப்போது சிறுவன் அறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை விடுவிக்க ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஷகோதி- உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருணை இன்றி எல்லையில் உள்ள அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் மனிதாபிமான அடிப்படையில் சிறுவனை திரும்பிச் செல்ல அனுமதித்துள்ளது பாராட்டுவதாக அமைந்துள்ளது.

English summary
Pakistan army on Tuesday handed over a 13-year-old boy to Indian authorities after he had inadvertently crossed the Line of Control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X