For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக்கியும் அடங்க மறுக்கும் பாக்.. இந்திய எல்லையில் ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை கடத்தும் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை பாகிஸ்தான் விநியோகித்து வருவதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேரு காலத்திலிருந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் மாநில அந்தஸ்தும் ரத்தானது.

இதனால் ஜம்மு காஷ்மீர் முற்றிலும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கையை விட்டு போய்விடுமோ என்ற கவலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுவிட்டது.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அதிர்ச்சி

அதிர்ச்சி

மேலும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து, ஆயுதங்களை விநியோகம் செய்து தீவிரவாத தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானின் பாச்சா இனி பலிக்காது என்பதால் அந்நாட்டுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்தது.

தலையிடக் கூடாது

தலையிடக் கூடாது

இதனால் இந்த உத்தரவை திரும்ப பெறும்படி உலக நாடுகளுக்கு பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்பதால் அதில் தலையிடக் கூடாது என ஒதுங்கிவிட்டன.

ஜிந்தாபாத்

ஜிந்தாபாத்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம், தார்தரன் மாவட்டம், சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் போலீஸ் படையிடம் பிடிபட்டனர். அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்ற காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை சேர்ந்தவர்கள்.

வெடிமருந்துகள்

வெடிமருந்துகள்

இந்த இயக்கினர், பஞ்சாப் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்துவதே இவர்களின் வேலையாகும். இதையடுத்து அந்த 4 பேரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், சீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், சேட்டிலைட் தொலைபேசிகள், செல்போன்கள், வயர்லஸ் செட்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களை கொண்டு வந்து இந்திய எல்லைகளில் போடும் திடுக் தகவலும் வெளியானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை கடத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அமித்ஷா

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 370 சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டவுடன் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிகுண்டுகளை போடும் சம்பவங்கள் நடக்கின்றன. இது மிகவும் புதிய ஒன்று. இந்த பிரச்சினைக்கு உள்துறை அமைச்சர் ஒரு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Pakistan drops weapons, explosives etc by unmanned aircraft to do terrorist activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X