• search

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு.. எல்லாம் ராணுவத்தின் திட்டம்.. குண்டை தூக்கி போடும் அமெரிக்கா!

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று அமெரிக்கா குண்டை தூக்கி போட்டுள்ளது. புதிய பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டது ஏற்கனவே அந்நாட்டு ராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை.

    தற்போது இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சி எப்படியும் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கான் பிரதமராவது உறுதியாகியுள்ளது.

    ஐஎஸ்ஐ குழந்தை

    ஐஎஸ்ஐ குழந்தை

    இம்ரான் கானை, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் குழந்தை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அவர் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட போகிறார். கடைசியாக இருந்த இரண்டு பிரதமர்கள் போல அவர் ஜனநாயகத்தை மதிக்க போவதில்லை என்றுள்ளது. இதனால் அந்நாட்டில் தீவிரவாதம் அரசு அதிகாரத்துடன் செயல்படும் என்றுள்ளது.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    இந்த வெற்றி குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். பாகிஸ்தானில் தேர்தல் என்றதுமே, எல்லோருக்கும் இந்த முடிவுதான் வரும் என்று தெரியும். பாகிஸ்தான் தேர்தல் குறித்து, ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறை தங்களுக்கு தகவல் வழங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

    ராணுவம்

    ராணுவம்

    இந்த தேர்தலில் எல்லோரும் பார்க்கும் வகையில் ராணுவம் மூக்கை நுழைத்தது. இம்ரான் கானுக்கு ஆதரவாக நிறைய செயல்களை செய்தது. மறைமுகமாக நிறைய செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ராணுவத்தின் வெற்றி மட்டுமே, இதை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, டிரம்ப் கூறி உள்ளார்.

    ஏற்றுக்கொள்ள மாட்டோம்

    ஏற்றுக்கொள்ள மாட்டோம்

    முக்கியமாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. அந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. அங்கு நடத்த விஷயங்கள் எல்லாவற்றையும் நாங்கள் கவனித்து வருகிறோம் என்றுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிற்கு எதிரான நிலைபாட்டை அமெரிக்கா எடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    Pakistan Election Result: Not So Fair, We know it already says US on Imran's victory.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more