பெனாசிர் பூட்டோவை கொல்ல நடந்த சதி.. பின்லேடனின் திட்டம்.. விஷயம் தெரிந்தும் அமைதி காத்த ராணுவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரை பின்லேடன் கொல்ல திட்டம் தீட்டியது தெரிந்தும் அமைதிகாத்த ராணுவம்!

  இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ கொல்லப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் பாதுகாப்பு துறைக்கு அந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. மேலும் அவர் எப்போது கொல்லப்படுவார், என்ன மாதிரியான திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றது என்றும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.

  இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை எதுவும் செய்யாமல் அமைதி காத்து இருக்கிறது. இதுகுறித்து எந்த விதமான எச்சரிக்கையும் பெனாசீர் பூட்டோவிற்கு அளிக்கப்படவில்லை.

  சரியாக அவர் இறந்து பத்து வருடங்களுக்கு பின் தற்போது இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் அலட்சிய போக்கு குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

  பெனாசீர் பூட்டோ கொலை

  பெனாசீர் பூட்டோ கொலை

  பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் பெனாசீர் பூட்டோ. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ராவல்பெண்டியில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி வெளியானது.

  திட்டம் என்ன

  திட்டம் என்ன

  இந்த கொலையை செய்வதற்கு எல்லா திட்டமும் ஒசாமா பின் லேடன் மூலம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒசாமா இதற்காக ஆப்கானிஸ்தான் வந்து இருக்கிறார். அவர் தான் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கிறது. ஒசாமா பின் லேடன் அனுப்பிய கொரியர் ஒன்றின் மூலம் இந்த தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

  நடவடிக்கை இல்லை

  நடவடிக்கை இல்லை

  இந்த செய்தி உளவுத்துறை மூலம் டிசம்பர் 19ம் தேதி பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் ''ஒசாமா பின் லேடன் பென்சீர் பூட்டோவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். இதற்காக இவர் இரண்டு பேரை பயன்படுத்த உள்ளார். டிசம்பர் 22ம் தேதியில் இருந்து இதற்கான பணிகள் நடக்க உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த கடிதம் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  முஷாரப்

  முஷாரப்

  இந்த சதி திட்டத்தில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பெயரும் இருந்துள்ளது. ஒசாமா பின்லேடன் இவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறான். ஆனால் உளவுத்துறைக்கு தகவல் தெரிந்ததை அறிந்து கொண்ட பின் லேடன் இந்த திட்டத்தை கடைசியில் கைவிட்டு இருக்கிறான். அனைத்து தகவலும் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசு மீது தற்போது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Benazir Bhutto has assassinated in 27 December on 2007. Pakistan knows Osama plan to kill Benazir Bhutto. ISI has sent the warning letter 10 days before the assassination, but Pakistan didn't took any action against the assassination.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற