For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஐ.நா. தீர்மானத்தின்படி ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் கூறியுள்ளதாவது:

காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தியே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். காஷ்மீர் விவகாரம் ஒரு சட்டப்பிரச்னை.

அந்த மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பை வலியுறுத்தும் காஷ்மீர் மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஒரு மாற்றுத்தீர்வாக இருக்காது.

இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தினால் ஐ.நா. தீர்மானத்தை செயலிழக்க வைத்துவிட முடியாது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் ஹூரியத் தலைவர்களை சந்தித்தில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் எப்போதுமே அவர்களிடம் ஆலோசனை நடத்துவது வழக்கம்

இவ்வ்வாறு தஸ்நிம் அஸ்லாம் கூறியுள்ளார்.

English summary
Pakistan on Thursday raked up the Kashmir issue once again. Pakistan said the Kashmir issue must be resolved through plebiscite as per the aspirations of the Kashmiri people. Pakistan asserted that Kashmir is a "legal issue".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X