பஞ்ச்ஷிர் எங்கள் வசமானது கொண்டாடும் தலிபான்கள் - தேசிய கிளர்ச்சிப்படை மறுப்பு
பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
காபூல்: பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான சண்டை தொடர்வதாகவும் முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்களுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளை வரிசையாக தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் வசமானது ஆப்கானிஸ்தான். இதையடுத்து, அதிபராக இருந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பியோடினார்.

இதனால் அச்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் அங்கு பணியில் இருந்த வெளிநாட்டவர்களும் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள புதிய அரசு அனைவருக்குமான அரசாக புதிய அரசு இருக்கும் என தாலிபான்கள் கூறியிருந்தனர். ஆட்சி அமைப்பதின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்களால் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் உயிர்சேதம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதேநேரத்தில் பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான சண்டை தொடர்வதாகவும் முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.
எனது இடத்தில், எனது இடத்திற்காகவும் அதன் கண்ணியத்தைக் காக்கவும் நான் இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அம்ருல்லா சாலேவின் மகன் எபதுல்லா சாலேவும், தலிபான்கள் கைப்பற்றியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
தற்போது ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. தொடர்ந்து சண்டை நடந்து வந்த நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications