ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்.. கைக்குட்டையை மசாலில் முக்கி வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஓட்டல்
சிக்கன் ஆர்டர் செய்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு வறுத்த துணி வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மணிலா: ஆன்லைனில் ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் சூடான வறுத்த துணி அனுப்பி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலிக் பரேஸ் எனும் பெண். தனது குடும்பத்துடன் தலைநகர் மணிலாவில் வாழ்ந்து வருகிறார். அலிக் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஓட்டலில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சம்பவத்தன்று அவர் தனது மகனுக்காக ஒரு பிரபல பாஸ்புட் உணவகத்தில் இருந்து சிக்கல் வறுவலை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். சுமார் அரை மணி நேரத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வந்தடைந்தது.

கைக்கு எட்டியது..
செம பசியில் இருந்த தாயும், மகனும் அந்தப் பார்சலை பிரித்து தாங்கள் ஆர்டர் செய்த சிக்கன் வறுவலை சாப்பிட ஆயத்தமாயினர். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல், அவர்களால் அந்த சிக்கனை கடித்து இழுக்க முடியவில்லை. பார்சலில் வந்த அந்த சிக்கன் மிகவும் கடினமாக இருந்தது.

ஷாக் ஆன அலிக்
இதனால் சந்தேகமடைந்த அலிக், அதன் மேல் தோலை நீக்கி உள்ளே பார்த்த அவர் அதிர்ந்து போய்விட்டார். காரணம் மேலே மசாலா மொறுமொறுப்புடன் இருந்த அதன் உள்ளே இருந்தது ஒரு கைக்குட்டை. இதனால் கடும் கோபமடைந்த அலிக், அதை அப்படியோ வீடியோ எடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

வைரலான வீடியோ
அதைப்பார்த்து நெட்டிசன்களும் அதிர்ந்து போய்விட்டனர். இணையத்தில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பாஸ்புட் உணவகத்தையும் கமெண்ட்டில் திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டனர்.

மூடப்பட்ட கிளை
இதையடுத்து அந்த பாஸ்புட் உணவகம் சம்பந்தப்பட்ட கிளையை தற்காலிகமாக மூடிவிட்டது. மேலும் தங்களுடைய ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications