For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்குப் போன் போட்டுப் பேசிய சீனப் பிரதமர் கீகியாங்... புதிய வரலாறு!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய சீன உறவுகளில் புதிய திருப்பமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீனப் பிரதமரே போன் போட்டுப் பேசியுள்ளார்.

சீனத் தலைவர் ஒருவர், தானாகவே முன்வந்து இந்தியப் பிரதமரை போனில் அழைத்துப் பேசியது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அரிய நிகழ்வும் கூட இது.

PM Modi speaks to Premier Li Keqiang of China

சார்க் நாடுகளின் தலைவர்களை தனது பதவியேற்புக்கு நேரில் அழைத்து பதவியேற்பைக் காண வைத்து மனம் குளிரப் பேசி, வயிறு நிறைய விருந்து வைத்து அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனப் பிரதமரே போன் செய்தது அரசு மட்டத்திலும், பாஜக மட்டத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகலில் கீகியாங்கிடமிருந்து மோடிக்குப் போன் வந்தது. அப்போது மோடிக்கு, லோக்சபா தேர்தலில் அவரது கட்சியும், அவரும் வெற்றி பெற்றதற்கு கீகியாங் வாழ்த்து தெரிவித்தார். மேலும், புதிய இந்திய அரசு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற சீன மக்களின் விருப்பத்தையும் கீகியாங் மோடியிடம் தெரிவித்தார்.

கீகியாங்கின் வாழ்த்துக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சீனாவுக்கு எப்போதுமே முதன்மை அளிக்கப்பட்டு வருவதையும் அப்போது சுட்டிக் காட்டியுள்ளார் மோடி.

இருதரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்த தனது அரசு ஆர்வமாக இருப்பதாக பேச்சின்போது சுட்டிக் காட்டியுள்ளார் மோடி. மேலும் சீனாவுடன் இணைந்தும், நெருக்கமாகவும் செயல்பட ஆர்வமாக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையே மாபெரும் பொருளாதார கூட்டுச் செயல்பாட்டின் அவசியத்தையும் மோடி வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி உயர் மட்ட அளவிலான தகவல் தொடரைப்ப பேணி வரவும் ஒப்புக் கொண்டனர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்த ஆண்டு கடைசியில் இந்தியா வர வேண்டும் என்ற அழைப்பையும் அப்போது கீகியாங்கிடம் மோடி விடுத்தார்.

பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் தொலைபேசி மூலம் மோடி பேசியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi spoke on the telephone to H.E. Mr. Li Keqiang, Premier of the State Council of the People’s Republic of China this afternoon at the latter’s initiative. Premier Li congratulated Prime Minister Modi on his victory in the recent general elections and conveyed the Chinese government’s desire to establish robust partnership with the new government of India for further development of relations between the two nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X