141 ரூபா தயிர்.. தெரியாம எடுத்து குடிச்சுட்டாங்க.. ஆளை கண்டுபிடிக்க செய்த அமர்க்களம் இருக்கே!
தயிர் திருடியவரை கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது.
தாய்பெய்: தயிர் பாக்கெட் ஒன்னு காணாம போயிடுச்சு... இதுதான் விஷயம்! அதுக்குத்தான் இவ்வளவு அமர்க்களமும்!
தாய்பெய் நகரில் உள்ள சீன கலாசார பல்கலைகழகத்தில் ஒரு பெண் படித்து வருகிறார். ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு தயிர் பாக்கெட்டை கொண்டு வந்து தனது அறையில் உள்ள டேபிள் மீது வைத்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
கொஞ்சம் நேரம் கழித்து வந்து பார்த்தால், அந்த தயிர் பாக்கெட்டை காணோம். அதன் விலை நம்ம ஊர் மதிப்புப்படி ரூ.141. அதனால் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம், "என் தயிர் பாக்கெட்டை எடுத்தீங்களா?" என்று கேட்டார்.

போலீசில் புகார்
அவர்களும் தயிரை பார்க்கவும் இல்லை, எடுக்கவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதனால் ரொம்பவே அப்செட் ஆகிட்டார் இந்த பெண். எப்படியாவது அந்த தயிர் பாக்கெட் கிடைத்தே ஆகணும்னு நேராக போலீஸ் ஸ்டேஷன் போனார். என் தயிர் பாக்கெட்டை காணோம், கண்டுபிடிச்சு தாங்க என்று ஒரு புகார் கொடுத்தார். புகாரை வாங்கி பார்த்த போலீசாருக்கு ஒரு செகண்ட்டில் பல்ஸ் குபீரென ஏறி இறங்கி விட்டது.

காலி டப்பா
பிறகு அப்புகாரின் அடிப்படையில் தயிர் பாக்கெட்டை தேட ஆரம்பித்தார்கள். கடைசியாக தயிர் பாக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் தயிரைதான் காணோம். அதாவது தயிர் டப்பா காலியாக விழுந்து கிடந்தது. எனவே தயிரை யாரோ எடுத்திருப்பார்கள் என்று நினைத்து பெண் இந்த விஷயத்தை விட்டுவிடுவார் என்று பார்த்தால், அப்போதும் விடவில்லை. யாராக இருக்கும்?

டப்பாவுக்கு டெஸ்ட்
அந்த தயிர் எடுத்தது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்காக அந்த காலி தயிர் டப்பாவில் கைரேகை இருக்கிறதா என போலீசாரை பார்க்க சொன்னார். அதில் எந்த கைவிரல் ரேகையும் கிடைக்கவில்லை என்று போலீசார் சொன்னதும், திரும்பவும் தயிர் டப்பாவுக்கு அடுத்த டெஸ்ட் எடுக்க முடிவானது. அதுதான் மரபணு சோதனை!!

வரிப்பணம்
ஆனால் இந்த டெஸ்ட் எடுக்க 6 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் தரப்பில் தயிர் டப்பாவுக்கு டிஎன்ஏ டெஸ்ட் நடத்தப்பட்டது. டெஸ்ட் எடுக்காவிட்டால், அந்த பெண் இந்த விஷயத்தை விடுவாரா என்ன? ஆனால் ஊர் ஜனங்க சும்மா இருப்பார்களா? இப்படி ஒரு சின்ன விஷயத்துக்காக எங்கள் வரிப்பணத்தை செலவு செய்வதா? என வெறி ஆகிவிட்டார்கள்.

திட்டி தீர்த்தார்கள்
இவ்வளவு செலவு செய்றதுக்கு பதிலாக அந்த தயிர் பாக்கெட்டுக்கு பதில் இன்னொரு தயிர் பாக்கெட் வாங்கியிருக்கலாமே என்று திட்டி தீர்த்து விட்டு போனார்கள். டப்பா மேட்டருக்கு எல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் வரை போய் இருந்தாலும், அந்த தயிரை யார்தான் எடுத்து சாப்பிட்டாங்கன்னு கடைசியா சொல்லி இருக்கலாம்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications