கையை கட்டி வாயை பொத்தி.. வீட்டுக்குள் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..5 பேரை கொத்தாக தூக்கிய போலீசார்..!
சென்னை : சென்னை செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பலை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுனராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்ற நிலையில், தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் சிறுமி வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன்னர் போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்த 5 மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த சிறுமியை மிரட்டி எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
மேலும் கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு கொடுமை செய்து வந்துள்ளனர். அளவுக்கு அதிகமான போதையில், சிறுமிக்கு போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டு சிறுமி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கொலை மிரட்டல்
இதுகுறித்து வெளியில் சொன்னாலோ , தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் சிறுமியை கொன்று விடுவோம் என்றும் அந்த போதைக் கும்பல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல நாட்களாக கொடுமை தொடர்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இது குறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

போலீசார் விசாரணை
முதலில் சிறுமி அளித்தது பொய் புகார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் உரிய விசாரணை நடத்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மற்றும் மனநல நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதிரடி கைது
இந்த விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயதான கௌதம் ,லட்சுமணன், அப்துல், அக்பர், பாபு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி புகார் கொடுத்த அடுத்த நாளே 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுமிக்கு 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications