For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமாவை ஓரம் கட்டிய போப்பாண்டவர்.. டிவிட்டரில்!

Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி: டிவிட்டரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.

பாலோயர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் ஒபாமாதான், போப்பை விட முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் ரீட்வீட்கள் வரிசையில் பார்த்தால் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளியுள்ளார் போப்பாண்டவர்.

இந்த வரிசையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரொம்பப் பின்னாடி இருக்கிறார். இங்கிலாந்து ராணியோ அவரை விட பின்னால் போயிருக்கிறார்.

ரொம்ப பிரபலமான ட்வீப்

ரொம்ப பிரபலமான ட்வீப்

ட்வீப் அதாவது டிவிட்டர் பயனாளிகளிலேயே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற பெயர் போப்பாண்டவருக்குக் கிடைத்துள்ளது.

ஒபாமாவுக்கு அடுத்து பாலோயர்கள் கூட்டம்

ஒபாமாவுக்கு அடுத்து பாலோயர்கள் கூட்டம்

பராக் ஒபாமாவுக்குத்தான் உலக அளவில் அதிக அளவிலான பாலோயர்கள் டிவிட்டரில் உள்ளனர். அதற்கு அடுத்த இடம் போப்பாண்டவருக்குத்தான்.

ரிப்பீட்டில்.. போப்தான் முதலிடம்

ஆனால் ரீட்வீட்களைக் கணக்குப் பார்த்தால் ஒபாமாவை விட போப்பாண்டவர்தான் செல்வாக்கானவராக இருக்கிறார்.

1.4 கோடி பேர்

1.4 கோடி பேர்

போப்பாண்டவரின் at @Pontifex என்ற பக்கத்தை கிட்டத்தட்ட 1.4 கோடி பேர் பின் தொடருகிறார்கள். அவர் போடும் ஒவ்வொரு டிவிட்டும், சராசரியாக 17,000 முறை ரீட்வீட் செய்யப்படுகிறது.

ஒபாமாவுக்கு 4.37 கோடி பாலோயர்கள்

ஒபாமாவுக்கு 4.37 கோடி பாலோயர்கள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டிவிட்டரில் 4.37 கோடி பாலோயர்கள் உள்ளனர். ஆனால், அவரது டிவிட்கள் சராசரியாக 1400 முறைதான் ரீட்வீட் செய்யப்படுகின்றனர். அதாவது போப்பாண்டவரை விட 10 மடங்கு குறைவு இது.

3வது இடத்தில் இந்தோனேசியா அதிபர்

3வது இடத்தில் இந்தோனேசியா அதிபர்

3வது இடத்தில் இந்தோனேசியா அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோயனோ இருக்கிறார். இவருக்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

13வது இடத்தில் கேமரூன்

13வது இடத்தில் கேமரூன்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 13வது இடத்திலும், இங்கிலாந்து ராணி எலிசெபத் 36வது இடத்திலும் உள்ளனர்.

English summary
Pope Francis is the most influential Twitter user – or ‘tweep’ - in the world, a new study has revealed. Although the Argentine Jesuit Pontiff is the second most followed world leader after Barack Obama, he massively outstrips the US President in the frequency with which his followers retweet his messages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X