உலகிலேயே மிக பாதுகாப்பான இடத்தில் மோடிக்கு ஓய்வறை.. கெத்து காட்டும் இஸ்ரேல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம் : உலகைப் பற்றி எந்த கவலையும் இன்றி பிரதமர் மோடி ஓய்வு எடுக்கும் வகையிலான மிகவும் பாதுகாப்பான இடத்தை இஸ்ரேல் மோடிக்காக தேர்வு செய்துள்ளது.

இது குறித்து கிங் டேவிட் விடுதியின் செயல்பாட்டு இயக்குனர் ஷெல்டன் ரிட்ஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி அவரின் முழு பயண வசதியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தங்குவதற்காக உலகிலேயே மிகப்பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்துள்ளோம்.

 Primeminister Modi's suite is more secured and he is staying at the world's best secure place

அவர் தங்கும் இடத்தில் வெடிகுண்டு தாக்குதல், கெமிக்கல் தாக்குதல்கள் என எந்த முறையிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. இந்த விடுதி முழுவதும் குண்டு வைத்து தகர்த்தப்பட்டாலும் மோடி இருக்கும் அறைக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அந்த அறையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையம் ஒரு தனிக் கூண்டாக அதை மாற்றிவிடும்.

சிறப்பான உணவு ஏற்பாடு

இது வரை இந்த விடுதியில் அமெரிக்க அதிபர்களான கிளிண்டன் முதல் ஒபாமா வரை வந்து தங்கியுள்ளதாகக் கூறுகிறார் ரிட்ஸ். கடைசியாக 3 வாரங்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் ட்ரம்ப் தங்கிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் உணவு பழக்கத்திற்கு மதிப்பு கொடுக்கும வகையில் முட்டை, சர்க்கரையில்லாத உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன.

அனைத்திலும் இந்திய ரசனை

இதுமட்டுமின்றி இங்கு அலங்காரத்திற்கு வைக்கப்படும் மலர்கள் கூட இந்திய அதிகாரிகளுக்கு பிடிக்கும் வகையில் அலங்கரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மோடி தங்கும் அறையிலேயே அவருக்கான உணவுகள் தயாரிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தயாரிக்கும் உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே சமைக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்கு உத்தரவாதம்

எங்களுடைய ஓட்டல் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்வதற்கு மேலும் காரணம் உள்ளது. மைக்கேல் ஃபெடர்மேனின் நிறுவனங்களில் ஒன்றான டேன் ஓட்டல்கள் இந்த ஓட்டலின் ஒரு அங்கம். ஃபெடர்மேனின் ஓஙங்ல ட்ரோன்கள், ஏவியோகின்ஸ் தயாரிப்பில் முன்னணி இடம் வகிக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையான டேன் ஓட்டல்களின் விடுதி பெங்களூரில் திறக்கப்பட உள்ளது, ஆனால் அது அத்தனை பாதுகாப்பானதா என்று தெரியவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi has been kept in the most secure suite in the entire planet.
Please Wait while comments are loading...