வங்கதேசத்தின் மானமே போய்விடும்.. முகமது யூனுஸ் போட்ட உத்தரவு.. சிறுபான்மையினருக்கு ஹேப்பி நியூஸ்
டாக்கா: உலகளவில் வங்கதேசத்தின் மானமே போகுது.. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அங்கு வாழும் இந்துக்கள் உள்பட சிறுபான்மையினருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடந்து வருகிறது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். கடந்த ஆண்டு ேஷக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்த பிறகு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறார் முகமது யூனுஸ்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. அதன்பிறகு இந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டனர். இந்துக்களின் வழிபாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நம் நாடு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் வங்கதேசத்தின் இடைக்கால அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அச்ச உணர்வுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். வங்கதேசத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ், பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை முகமது யூனுஸ் நடத்தினார். இந்த கூட்டத்தில் தான் அவர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வங்கதேச இடைக்கால அரசின் உள்துறைக்கான ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி, சிறப்பு உதவி பிரிவின் முதன்மை ஆலோசகர் குதா பாஷ் சவுத்ரி, உள்துறை செயலாளர் நசிமுல் கானி, போலீஸ், எல்லை காவல்படை, அதிரடி படை, டாக்கா மெட்ரோபாலிட்டன் போலீஸ், கடற்படை பிரிவினர் உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக டெய்லி ஸ்டார் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆலோசனை கூட்டத்தின்போது முகமது யூனுஸ், ‛‛வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நம் நாடு இங்குள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் உலகளவில் வங்கதேசம் மீதான நல்ல பிம்பம் பாதிக்கும். இதனால் இந்த விஷயத்தில் நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக கமாண்ட் சென்டர் அல்லது கமாண்ட் தலைமையகத்தை அமைக்க வேண்டும். இது போலீஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் ஒருங்கிணைத்து பணி செய்ய வேண்டும். போர்காலம் போன்று நினைத்து நாம் அலர்ட்டாக செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications