For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தர்ம சங்கடம்.." உலக கோப்பை கால்பந்து.. சம்பவம் செய்த ரசிகர்கள்! சங்கடத்தில் நெளிந்த அதிகாரிகள்

Google Oneindia Tamil News

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளே கத்தார் அதிகாரிகளுக்குத் தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது.

புட்பால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கால்பந்து உலகக் கோப்பை நேற்று தொடங்கியது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கத்தாரில் ரசிகர்கள் முகாமிட்டு உள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உலக கோப்பை கால்பந்து நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 32 அணிகள் களமிறங்குகின்றன.

 குஜராத் மாடல்.. 4,000 காலேஜ், 600 ஐடிஐ.. இதுதான் வளர்ச்சி.. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம் குஜராத் மாடல்.. 4,000 காலேஜ், 600 ஐடிஐ.. இதுதான் வளர்ச்சி.. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

கத்தார்

கத்தார்

கத்தாரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. கத்தாரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் கத்தார் அணி ஈக்வடார் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை ஈக்வடார் அணிவீழ்த்தியது. இரண்டாவது நாளான இன்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இங்கிலாந்து ஈரான் அணிகளும், செனகல் நெதர்லாந்து அணிகளும் இன்று மோதுகிறது.

உலக கோப்பை

உலக கோப்பை

உலக கோப்பையை நடத்த கத்தார் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து இருந்தாலும் கூட, தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகள் உலக கோப்பையைச் சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கிறது. 2010இல் போட்டியை நடத்த உரிமையைப் பெற்ற கத்தார், அடுத்த 10 ஆண்டுகளில் மைதானங்கள் மட்டுமின்றி, விடுதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பையும் ஏற்படுத்த வேண்டி இருந்தது. இதனால் வெளிநாடுகள், அதிலும் குறிப்பாக இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பலரும் கட்டுமான வேலைக்கு கத்தார் சென்றனர். இருப்பினும், பாதுகாப்பற்ற வேலை சூழல் உட்பட பல காரணங்களால் 3500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பீர் சர்ச்சை

பீர் சர்ச்சை

இது எல்லாம் கடந்த காலத்தில் நடந்தது. சரி உலக கோப்பை தொடங்கிவிட்டது. இப்போதாவது சர்ச்சை முடியுமா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. உலக கோப்பை தொடங்கிய பின்னரும் சர்ச்சைகள் தொடர்கின்றனர். உலக கோப்பை தொடங்க சில நாட்கள் இருந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானங்களில் பீர் விற்பனைக்கு கத்தார் அரசு தடை விதித்து இருந்தது. இது சர்வதேச ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கூட இந்த விஷயத்தை வெளிப்படையாகவே விமர்சித்து இருந்தனர். பீர் தடை என்றால் முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும் என்றும் கடைசி நிமிடத்தில் அறிவிப்பது தவறு என்றும் வீரர்கள் கூறி இருந்தனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இதற்கிடையே நேற்று முதல் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் கத்தார் டாப் அதிகாரிகளைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியை காண ஏராளமான ஈக்வடார் ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் திடீரென உரத்த குரலில் "Queremos cerveza" என்ற கத்த தொடங்கினார். இதற்கு "எங்களுக்கு பீர் வேண்டும்" என்று அர்த்தமாகும். அவர்கள் சத்தமாக தங்களுக்கு பீர் வேண்டும் என்று கோஷமிடத் தொடங்கினர். இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம்

சம்பவம்

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ஈகுவடார் ரசிகர்கள் எங்களுக்கு பீர் வேண்டும் என்று என்று கோஷமிட்டு உள்ளனர். முதல் போட்டியிலேயே இந்த நிலைமை. வரும் போட்டிகளில் நாம் இதுபோன்ற நிகழ்வுகளை அதிகம் காண்போம். கத்தார் கடைசி நிமிடத்தில் அறிவித்த பீர் தடை ரசிகர்களை கடும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. போட்டி தொடங்க வெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு கத்தார் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே உள்ளது" என்றார்.

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

உலகக் கோப்பை போட்டிகளுக்கு மிகப்பெரிய ஸ்பான்சர்களில் ஒன்றாக பீர் நிறுவனம் ஒன்றும் இருக்கிறது. கத்தார் அரசு ஸ்டேடியத்தில் பீர் விற்பனை செய்ய தடை விதித்தற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கத்தாரின் இந்த முடிவுக்கு பிபா கூட ஆதரவாகவே இருந்தது. ரசிகர்கள் பீர் இல்லாமல் உலகக் கோப்பையை ரசிக்க முடியும் என்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மைதானங்களில் மது தடை இருப்பதையும் பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ சுட்டிக்காட்டி இருந்தார்

English summary
Football world cup fans chants we need beer in very first match: Qatar Football world cup latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X