For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கியர் மீது இனவெறித் தாக்குதலில்.. முகத்தில் படுகாயம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் :41 வது சீக்கியர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலர் அவரைத் தாக்கி முகத்தில் காயம் ஏற்படுத்தினர். அவரது தலைப்பாகையை அவிழ்த்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Racial attack in US: Sikh techie faces brutal assault, civil rights group demands justice

தாக்கப்பட்ட இந்தியரின் பெயர் மான் சிங் கல்சா. திருமணமானவர். ஒரு குழந்தையும் உள்ளது. ஐடி நிபுணராக கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 25ம் தேதி இவர் தனது காரில் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவரை வழிமறித்து பீர் பாட்டில்களைக் கொண்டு கார் கண்ணாடியைத் தாக்கி உடைத்தது. பின்னர் அவரையும் அக்கும்பல் தாக்கியது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் மிகப் பெரிய சீக்கிய மனித உரிமை அமைப்பான சீக்கியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா அங்கிருந்து தப்பிப் போக முயன்றார். ஆனால் அக்கும்பல் பின் தொடர்ந்து வந்து தாக்கியுள்ளது. உடைந்த கண்ணாடி வழியாக உள்ளே தாக்கியுள்ளனர். அவரது டர்பனைப் பிடுங்கி கீழே வீசியுள்ளனற். அவரது முகத்திலும் சரமாரியாக குத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

20 முதல் 30 வயது வரைக்குள்ளன 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியதாகவும் சீக்கியர் கூட்டணி கூறியுள்ளார். அந்தக் கும்பலில் 3 பேர் உடல் ரீதியாக தாக்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

English summary
A 41-year-old Sikh-American IT specialist was brutally attacked by some men, who knocked off his turban and allegedly cut his religiously-mandated unshorn hair with a knife, prompting a civil rights organisation to demand a hate crime investigation into the incident. Maan Singh Khalsa, a father and IT specialist in California, was driving home on the night of September 25 when a group of men in car threw a beer can at his vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X