For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

190 ஆண்டுகள் பழமையான விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம் : பழைய சாதனை முறியடிப்பு

Google Oneindia Tamil News

ஹாங்காங்: சுமார் 190 ஆண்டுகள் பழமையான பிரபல விஸ்கி பாட்டில் ஒன்று சுமார் ரூ 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டதன் மூலம் பழைய சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஒன்று ஏலத்துக்கு வந்தது. சுமார் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பாட்டில் ‘தி மக்காலன்' என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

எனவே, இந்த பாட்டிலை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் அந்த பாட்டில் 631,850டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 88 லட்சத்து 68 ஆயிரத்து 252 ரூபாய் ஆகும்.

இதனை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனிநபர் ஏலம் எடுத்துள்ளதாக மட்டும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது. அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் மால்ட் விஸ்கி பாட்டில் ஒன்றை நியூயார்க்கைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sotheby’s said it sold a bottle of Macallan for HK$4.9 million ($631,850) in Hong Kong, setting a record for the most expensive bottle of single malt whisky sold at auction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X