
உடலுறவின்போது.. பாதியிலேயே "அதை" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்!
கலிபோர்னியா: உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது.
எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள்.
அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா வந்தால் அனுமதியின்றி, துணையின் சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சி ரீதியிலான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர செய்து இழப்பீட்டை கேட்கலாம்.

அவை உறுப்பினர்
இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா டெய்லி மெய்ல் ஊடகத்திற்கு கூறுகையில் 2017-ஆம் ஆண்டு முதல் இன்னொருவர் சம்மதமின்றி ஆணுறையை அகற்றும் விவகாரத்தை சட்ட ரீதியில் தடுப்பதில் நான் பணியாற்றி வருகிறேன். இத்தகைய செயலைச் செய்பவர்களை தங்கள் தவறுக்கு பொறுப்பாகும் வரை நான் ஓய மாட்டேன்.

பாலியல் குற்றம்
இதை ஊக்குவிக்க முடியாது. இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் மூன்றில் ஒரு பெண்ணும் ஐந்தில் ஒரு ஆணும் இதில் உடலுறவின்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்கள். இப்போது கலிபோர்னியாவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பாலியல் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆணுறை
இது போல் திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவதால் பெண் கருத்தரிப்பது நடந்து விடுகிறது. குழந்தை பிறப்பை தடுக்க ஆணுறை பயன்படுத்த சம்மதம் தெரிவிக்கும் பெண்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களும் அதிக இன்பத்திற்காக இது போன்ற விதிமீறலான செயலை செய்கிறார்கள் என்றார்.

கலிபோர்னியா
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கலிபோர்னியாவில் புதிய சட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் முதல் மாகாணமாக கலிபோர்னியா இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பது பொருளாகும். இந்த வழக்கிற்கு இழப்பீட்டை கூட கேட்க முடியும்.