For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பர்ட்விங்... சான்டியாகோ ஜூவில் வளரும் அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள்!

Google Oneindia Tamil News

சான்டியாகோ: சான்டியாகோவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில், அரிய வகை வண்ணத்துப் பூச்சிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு அவை சுதந்திரமாக வசிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

சான்டியாகோ விலங்கியல் காப்பகத்தின் சபாரி பார்க் ஊழியர்கள் இந்த வண்ணத்துப் பூச்சிகளை பாரமரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மொத்தம் 130 வண்ணத்துப் பூச்சிகளின் கக்கூன் எனப்படும் கூட்டுப் புழுக்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அரிய வகை வண்ணத்துப் பூச்சிகளாகும். இவை இந்தோனேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக...

சட்டவிரோதமாக...

இவற்றை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதை அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவியல் அதிகாரிகள் பறிமுதல் செய்து இந்த காப்பகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

பர்ட்விங்...

பர்ட்விங்...

இதுகுறித்து காப்பகத்தின் கியூரேட்டர் மைக்கேல் மேஸ் கூறுகையில், இவை அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் ஆகும். இவற்றுக்கு பொதுவான பெயர் பர்ட்விங்.

பாதுகாக்கப் பட்ட உயிரினம்...

பாதுகாக்கப் பட்ட உயிரினம்...

இவை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டவையாகும். இந்தப் பூங்காவில் இவை நிம்மதியாக வாழும் என்று நம்புகிறோம் என்றார்.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

சில கூட்டுப் புழுக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கக்கூன்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. விரைவில் அவற்றிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் வெளி வரும் என்று தெரிகிறது.

English summary
San Diego Zoo Safari Park animal care staff gently unpacked 130 butterfly pupae on Thursday, February 26. The pupae, living butterfly cocoons, are an endangered species from Indonesia. The insects were confiscated by U.S. Fish & Wildlife officials from a shipment sent into the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X