For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரொனால்டா ரெண்டு பாட்டிலைதான் நகர்த்தி வச்சார்.. ரூ. 29,320 கோடி லாஸ்.. கோகோ கோலாவுக்கு!

Google Oneindia Tamil News

லிஸ்பன்: லிஸ்பனில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கோகோ கோலாவை ஓரங்கட்டிவிட்டு தண்ணீரை குடிக்க கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து நேற்று ஒரு நாள் மட்டும் ரூ 29 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.

Recommended Video

    Cristiano Ronaldo செய்த செயலால் Coco Cola companyக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்

    ரொனால்டோ தனது உணவுப் பழக்க வழக்கத்தில் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர் என கூறப்படுகிறது. தனது மகனுக்கும் உணவு கட்டுப்பாடு குறித்து ரொனால்டோ அறிவுறுத்துவார்.

    இதுகுறித்து ஒரு முறை ரொனால்டோவே கூறியுள்ளார். எனது மகன் கோகோ கோலா, ஃபேண்டாவை குடிப்பார், நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார். நான் வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார் என தெரிவித்திருந்தார்.

    கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்ட நபர்- ரூ.5 லட்சம் பைன் சுப்ரீம் கோர்ட்கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்ட நபர்- ரூ.5 லட்சம் பைன் சுப்ரீம் கோர்ட்

    ஈரோ கால்பந்து

    ஈரோ கால்பந்து

    இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உணவுக் கட்டுப்பாட்டை மிகவும் கடுமையாக கையாண்டார். ஆம் ஈரோ கால்பந்து போட்டித் தொடர் குறித்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு லிஸ்பனில் நடந்தது. இதில் ஜூவன்டஸ் அணி சார்பில் ஆடும் ரொனால்டோ பிரஸ் மீட்டுக்கு வந்தார்.

    தண்ணீர் பாட்டில்

    தண்ணீர் பாட்டில்

    அங்கு அவர் அமர்ந்திருந்த டேபிளிலில் இரு கோகோ கோலா பாட்டில்களும் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தன. அவற்றை பார்த்த ரொனால்டோ கோலா பாட்டில்களை அப்படியே ஓரங்கட்டினார். தண்ணீர் பாட்டிலை மட்டும் உயர்த்தி காட்டினார்.

    தண்ணீர் குடியுங்கள்

    தண்ணீர் குடியுங்கள்

    ஐரோப்பிய கண்டத்தில் ரொனால்டோவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் ஏற்கெனவே இது போன்ற குளிர்பானங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் தண்ணீரை குடியுங்கள் என காட்டிய செய்கை உலகம் முழுவதும் வைரலானது.

    242 பில்லியன்

    242 பில்லியன்

    இதனால் அந்த கோலா நிறுவனம் நேற்று ஒரே நாளில் ரூ 29,337 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் 242 பில்லியன் டாலராக இருந்த கோலாவின் சந்தை மதிப்பு இந்த சில விநாடி நிகழ்வுக்கு பிறகு 238 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அது போல் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.

    English summary
    Cristiano Ronaldo's press meet incident causes Rs 29,000 crore loss for Coca cola company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X