For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பயோ வெப்பன்" ரெடி.. ரொம்ப அவசரம்! ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதறியடித்து ஓடிய ரஷ்யா! என்ன நடந்தது

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் அணு ஆயுத போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் திடீரென பயோ போர் குறித்த புகாரை ரஷ்யா வைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்து இன்றோடு சரியாக இரண்டு வாரம் கடந்துவிட்டது. கடந்த இரண்டு வாரம் முன் வியாழக்கிழமை அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்தது. அதன்பின் உக்ரைன் மீது 600க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது.

இதில் உக்ரைன் மக்கள் 20 ஆயிரம் பேரும், ரஷ்ய படையினர் 15 ஆயிரம் பேரும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கொடூரம்! உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்.. கொந்தளிக்கும் உலக நாடுகள்!கொடூரம்! உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்.. கொந்தளிக்கும் உலக நாடுகள்!

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் அமெரிக்கா ஆதரவுடன் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து புகார் வைத்து வருகிறது. பயோ ஆயுதங்கள் என்பது சர்வதேச போர் முறைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதாவது ஒரு நாட்டின் மீது நேரடியாக ஆயுதங்களை வைத்து போர் தொடுக்காமல், நோய்களை பரவ செய்து போர் தொடுக்கும் முறைகள் பல தோன்றிவிட்டன. கொரோனா கூட சீனாவின் பயோ வார் என்றுதான் தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது.

உக்ரைன்

உக்ரைன்

இந்த நிலையில்தான் ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் நகரங்களில் சில ஆராய்ச்சி மையங்களை உக்ரைன் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவின் பென்டகன் உதவியுடன், அவர்களின் நிதியோடு இந்த ஆராய்ச்சியை உக்ரைன் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. இங்கு மறைமுகமாக பரவ கூடிய, வேகமாக பரவ கூடிய, பல மரணங்களை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் பற்றி ஆராய்ச்சி நடக்கிறதாம்.

புடின் புகார்

புடின் புகார்

இதை பற்றி ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் விதமாக இந்த வைரஸ்கள் மீது உக்ரைனில் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. பறவைகள், வெளவால்கள், பல்வேறு வைரஸ்களை கொண்ட விலங்குகளில் ஆராய்ச்சி செய்து, அதில் இருந்து வைரஸ்களை எடுத்து இவர்கள் பரப்புவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் என்று ரஷ்யா அந்த குற்றச்சாட்டில் கூறி உள்ளது.

கொரோனா

கொரோனா

இங்கு கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுவதாகவும், அதேபோல் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட மற்ற பல நோய்களை கொண்டு மாற்றி, இன்னும் கொடுமையானதாக உருமாற்றி அதை பரப்ப உக்ரைன் - அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் இதை அமெரிக்கா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டது. உக்ரைனில் அப்படி பயோ ஆயுதங்கள் இல்லை.

கொரோனா

கொரோனா

இங்கு கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுவதாகவும், அதேபோல் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட மற்ற பல நோய்களை கொண்டு மாற்றி, இன்னும் கொடுமையானதாக உருமாற்றி அதை பரப்ப உக்ரைன் - அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் இதை அமெரிக்கா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டது. உக்ரைனில் அப்படி பயோ ஆயுதங்கள் இல்லை.

பயோ தாக்குதல்

பயோ தாக்குதல்

ரஷ்யாதான் பயோ தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது என்று பதில் புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பயோ ஆயுதங்கள் குறித்து ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அவசர மீட்டிங் நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது. இன்று இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங் நடக்க உள்ளது. உக்ரைன் பயோ ஆயுதங்களை வைத்து எங்களை அழிக்க பார்க்கிறது என்று ரஷ்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

English summary
Russia goes to UNSC against Ukraine and USA on the bio weapon allegations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X