ஆக்சிஜன் தருகிறோம்.. ரெம்டெசிவரும் கொடுக்கிறோம்.. இந்தியாவுக்கு கை கொடுக்கும் ரஷ்யா
மாஸ்கோ: இந்தியாவுக்கு மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்தும் கொடுக்க ரஷ்யா முன்வந்துள்ளது. அடுத்த 15 நாட்களில் இந்தப் பணிகள் தொடங்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது கொரோனாவைரஸின் கோர முகம் எப்படி இருக்கும், எந்த அளவுக்கு அது சீரழிவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் டெட்ராஸ்.

மருத்துவமனைகளில் வசதிகள் இல்லை, இடமில்லை, எதுவும் இல்லாத நிலையால் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களை விட எந்த வசதியும், சிகிச்சையும் கிடைக்காமல் இறப்போர் அதிகரித்து வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்குக் கை கொடுக்க முன்வந்துள்ளது ரஷ்யா. இந்தியாவுக்கு தற்போது அதிக அளவிலான மருத்துவ ஆக்சிஜனும், ரெம்டெசிவர் மருந்தும் தேவைப்படுவதால் அதைத் தர ரஷ்யா முன்வந்துள்ளது.
முதல் கட்டமாக வாரத்திற்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் ரெம்டெசிவர் ஊசிகள் தரப்படுவதாக தெரிவித்துள்ளது ரஷ்யா. இதை படிப்படியாக உயர்த்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதேபோல கப்பல் மூலம் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை ரஷ்யா அனுப்பி வைக்கும் எனத் தெரிகிறது.
ரெம்டெசிவர் இறக்குமதிக்கு தீர்வையை ரத்து செய்து மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும் ரெம்டெசிவரை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்டவை குறித்து பல்வேறு நாடுகளுடனும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications