இளவரசர் என்றாலும் குற்றம் குற்றமே... நண்பனை சுட்டுக் கொன்ற சவுதி இளவரசருக்கு மரண தண்டனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: இளவரசரானாலும் குற்றம் செய்தால் தப்ப முடியாது என்பதை நிரூபித்துள்ளது சவுதி அரேசியா. நண்பன் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் சவுதி இளவரசர் கபீருக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல் கபிர். இவரது நண்பர் அதெல்அல் மகிமித். நெருங்கிய நண்பர்களான இவர்களுக்கிடையே கடந்த 2012ம் ஆண்டு வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சண்டையாக முற்றியுள்ளது.

Saudi Arabia executes prince over shooting murder

இதனால் ஆத்திரமடைந்த இளவரசர் கபிர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனது நண்பர் மகிமித்தை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார். இதில் மகிமித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அருகில் இருந்த மற்றொருக்கும் இந்த சம்பவத்தின் போது காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து ரியாத் கோர்ட் விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கின் முடிவில் இளவரசர் கபிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவில் 134 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 134வது நபராக அந்நாட்டின் இளவரசர் கபிர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saudi Arabia executed a prince, Truki bin Saud al-Kabir for shooting murder case yesterday.
Please Wait while comments are loading...