எங்களை போட்டு அடிக்காதீங்க.. போரை நிறுத்த ஈரானிடம் பேசும் சவுதி அரேபியா! டிரம்பை நம்பாத ‘பிரின்ஸ்'

Subscribe to Oneindia Tamil

ரியாத்: மத்திய கிழக்கில் போரை கட்டுப்படுத்த வேண்டும். எங்களை குறிவைத்து தாக்க வேண்டாம் என்று ஈரானுடன் சவுதி அரேபியா நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்கள் நாட்டை பாதுகாப்பார் என்று சவுதி அரேபியா நம்பியது.ஆனால் அது நடக்காததால் சவுதி அரேபியாவே நேரடியாக ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

saudi-arbia-intensified-to-iran-to-defuse-war

மேலும் இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதையை ஈரான் மூடியுள்ளது. இது உலக நாடுகளை பாதிக்க உள்ளது. இதனால் இந்த போர் எதிர்பார்த்ததை விட உக்கிரமாக மாறி உள்ளது.

மத்திய கிழக்கில் போர் மேகம்

குறிப்பாக இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஈரான் தொடர்ந்து இந்த நாடுகளை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. இதனால் மொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

சவுதி அரேபியாவில் பாதிப்பு

சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் அந்த நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனம் அரோம்கோவில் தாக்குதல் நடத்தி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான இங்கு தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவுக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கைவிட்ட டொனால்ட் டிரம்ப்

மேலும் அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளாக உள்ளன. அமெரிக்கா தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நம்பினார். ஆனால் டிரம்ப் ஏமாற்றிவிட்டார். இதனால் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் வேறு வழியின்றி சவுதி அரேபியாவே ஈரானிடம் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

ஈரானிடம் பேசிய சவுதி அரேபியா

இதனை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவின் அதிகாரிகள், நேரடியாக ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். சவுதி அரேபியாவின் பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதி அரேபியா மீது தாக்க வேண்டாம். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கூறினர். இதுபற்றி கேட்டதற்கு சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஈரான் நிலைப்பாடு என்ன?

அதேவேளையில் ஈரான் தற்போது வரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டவில்லை. சவுதி அரேபியாவின் இந்த முயற்சிக்கு மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இருப்பினும் தற்போதைய போர் தேவையின்றி சவுதி அரேபியாவின் வர்த்தகத்தை பாதித்துள்ளது, அந்த நாட்டு மக்களை அச்சத்தில் தள்ளி உள்ளது. இதனால் தான் டிரம்பை நம்பி பயனில்லை. நேரடியாக ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சவுதி அரேபியா முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+